- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் கத்தரிக்காய் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக கத்திரிக்காய் வைத்து ஒரு வித்தியாசமான மசாலா செய்து பாருங்கள். தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.
ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி அதே தக்காளி தொக்கை செய்து குடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு எப்போதும் செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் எப்போதும் போல் இல்லாமல் கத்திரிக்காய் வைத்து மல்லி மசாலா செய்து பாருங்கள்.
இந்த கத்திரிக்காய் மசாலா சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இப்போது சுவையான கத்திரிக்காய் மல்லி மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஒன் பாட் கத்தரிக்காய் சாதம்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு மற்றும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு இவை நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் மல்லி மசாலா தயார்.






