- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
சாலையோர உணவுகள் ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடியது என்றால் அது காளான் அப்படின்னு சொல்லலாம். காளான் பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. காளான் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவுக்கு காளான் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுல முழுக்க முழுக்க காளான் மட்டுமே போட்டு செய்ய மாட்டாங்க முட்டை கோஸ் சேர்த்து செய்வாங்க ஆனா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இப்ப நான் காளான் லயே நிறைய வெரைட்டீஸ் வந்துருச்சு அந்த வகையில நிறைய பேருக்கு முட்டை காளான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இந்த முட்டை காளான் ரீசன்டா குக் வித் கோமாளில பிரியங்கா செஞ்சிருந்தாங்க. அதுமட்டுமில்லாம அந்த முட்டை காளான் வச்சு பரிமாறதுக்கு ஒரு சூப்பரான கட்டோரியும் செஞ்சிருந்தாங்க. அந்தக் கட்டோரியில் முட்டை காளான் வச்சு சாப்பிட்டுட்டு கூடவே சேர்த்து அந்த கட்டோரியையும் நம்ம சாப்பிடலாம். அந்த சூப்பரான கட்டோரி செய்றது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முயற்சி செஞ்சா கண்டிப்பா செஞ்சு முடிச்சிடலாம். ஒரே தடவையில் வருமானு கேட்டா கொஞ்சம் கஷ்டம் தான் ரெண்டு மூணு தடவ முயற்சி செஞ்சீங்கன்னா கண்டிப்பா சூப்பரான கட்டோரி செஞ்சுடலாம்.
இந்த கட்டோரியை மைதா மாவுல நம்ம செய்யப் போறதால அது சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியாவே இருக்கும். அதைவிட இந்த முட்டை காளான் செய்யும் போது நமக்கு முழுதாகவே காளான் வச்சு சாப்பிட பிடிக்கும் அப்டின்னா ஃபுல்லா காளான் போட்டுக்கலாம். இல்ல அப்படின்னா அது கூட முட்டைகோஸ் சேர்த்து செய்யலாம். இதுக்கு நம்ம காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தோம் அப்படின்னா கலர் சூப்பரா இருக்கும். சாப்பிடறதுக்கும் ரொம்ப விருப்பமா இருக்கும். குழந்தைகள் உங்க கிட்ட எப்பவாவது காளான் வேணும்னு கேட்டாங்கன்னா வெளியில கண்டிப்பா வாங்கி தராதீங்க.
வீட்லையே சூப்பரான இந்த காளான் ரெசிபியை செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபி பாக்குறதுக்கு தான் ரொம்ப பெருசா இருக்க மாதிரி இருக்கும் ஆனா செஞ்சு பார்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப ஈஸியா தான் இருக்கும். இது செய்றதுக்கு சாப்பிடறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். குழந்தைகள் பெரியவங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள் எல்லாருக்குமே செஞ்சு கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவாங்க. ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல இருந்தா கூட நீங்க இந்த காளான் ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான கட்டோரி முட்டை காளான் எப்படி ருசியா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காளான் மிளகு மசாலா இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க!
Ingredients
Method
கட்டோரி செய்வதற்கு முதலில் மைதா மாவு ஒரு கப், ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அடித்து கலந்து கொள்ளவும்.
பிறகு ஏதாவது ஒரு பேப்பர் கப் எடுத்து அதனை சூடான எண்ணெயில் மூழ்கும் அளவிற்கு சூடாகி கலந்து வைத்துள்ள மைதா கலவையில் அந்த சூடான பேப்பர் கப்பை வைத்து எடுத்தாய் மாவு அப்படியே கப்பில் ஒட்டிக் கொள்ளும்.
அதனை சூடான எண்ணெயில் அப்படியே வைத்தால் மைதா மாவு கட்டோரி மட்டும் தனியாக பிரிந்து வந்துவிடும். அதை நன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காளான், முட்டைக்கோஸ், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு பக்கோடா பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் உப்பு தேவையான அளவு சேர்த்து இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பொரிக்கவும்.
மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பொறித்து வைத்துள்ள காளானை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சோயா சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை காளான் தயார்.
முட்டை காளானை நாம் செய்து வைத்துள்ள கட்டோரியில் வைத்து பரிமாறினால் சுவையான கட்டோரி முட்டை காளான் தயார்.






