காளான் வைத்து காளான் பிரியாணி காளான் கிரேவி காளான் பட்டர் மசாலா காளான் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய காளான் ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம் ஆனா இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த காரசாரமான காளான் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும். அந்த ரெசிபிக்கு நீங்க அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான காளான் பெப்பர் மசாலா தான் பாக்க போறோம். இந்த காளான் பெப்பர் மசாலாவை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது.
அதோட இந்த சூப்பரான காளான் பெப்பர் மசாலாவ நெய் சாதம் தக்காளி சாதம், புளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இந்த புரட்டாசி மாதத்தில் இந்த மாதிரி ஒரு சைட் டிஷ் மட்டும் காளான் வச்சு செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் அசைவத்தையே தேட மாட்டாங்க. இந்த காளான் பெப்பர் மசாலா செய்வதற்கு நம்ம வீட்ல இருக்கக்கூடிய சில பொருட்கள் மட்டுமே போதுமானது இதுக்குன்னு நீங்க நிறைய செலவு பண்ண தேவையில்லை.
இந்த புரட்டாசி மாதத்தில் வெறும் உருளைக்கிழங்கு சாம்பார் வச்சு கொடுக்காம இந்த சூப்பரான காளான் வச்சு செய்யக்கூடிய காளான் பெப்பர் மசாலா ஒரு தடவை செஞ்சு கொடுங்க. அப்பதான் அசைவ பிரியர்கள் கொஞ்சமாச்சும் விரதத்தை கடைபிடிப்பாங்க. இந்த சூப்பரான பெப்பர் மசாலாவ நீங்க சாதத்துக்கு மட்டுமில்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான காளான் மிளகு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
காளான் மிளகு மசாலா | Mushroom Pepper Masala Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 250 கி காளான்
- 4 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடிப்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறவும்.
- அனைத்தும் எண்ணெயிலேயே வேகவேண்டும் அதனால் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து அந்த பொடியையும் காளானுடன் சேர்த்து கிளற வேண்டும்.
- இறுதியாக காளான் நன்றாக வெந்து வந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் பிரைட் ரைஸ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!