பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

சிறுதானியங்களில் ஒன்றான கருப்பு கவுனி அரிசி நம் அன்றாட வாழ்க்கையில சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிசி என்று சொல்லலாம். காரணம் என்னவென்றால் இந்த அரிசியில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருக்கு. அந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் சிறுதானியங்கள் சாப்பிட்டால் உடம்பில் எந்த நோய்கள் வராது. அந்த காலத்தில் மன்னர்கள் பெரும்பாலும் கருப்பு கவுனி அரிசி தான் சாப்பிடுவாங்க மன்னர்கள் சாப்பிட்ட இந்த கருப்பு கவுனி அரிசியை இப்போ நிறைய பேரு சாப்பிட்டு இருக்காங்க இந்த கருப்பு கவுனி அரிசி வச்சு சாதம் செஞ்சு சாப்பிடலாம் கருப்பு கவுனி அரிசி வச்சு பொங்கல் செய்யலாம்.

-விளம்பரம்-

கருப்பு கவுனி அரிசி வச்சு இன்னும் நிறைய லட்டு அந்த மாதிரி கூட ரெசிபி செய்யலாம். அந்த வகையில கருப்பு கவுனி அரிசி வச்சு பாரம்பரியமான ஒரு சூப்பரான கஞ்சி செய்ய போறோம். வாரத்துல ரெண்டு தடவை கருப்பு கவுனி அரிசி கஞ்சி குடித்தால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. எந்த நோய்களும் வராது. கருப்பு கவுனி அரிசி வச்சு செய்ய போற இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க கருப்பு கவுனி அரிசி கஞ்சி வச்சு காலைல பிரேக் பாஸ்ட்க்கு சாப்பிடலாம் இந்த மாதிரி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

- Advertisement -

உடல் எடை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க சிறுதானியங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கருப்பு கவுனி அரிசியும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் ஆரோக்கியமான ஒரு அரிசி. அதனால கண்டிப்பா அடிக்கடி உங்க உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் எல்லாருமே இந்த கருப்பு கவுனி அரிசியில் இந்த கஞ்சி செஞ்சி குடிக்கலாம். இந்த கஞ்சியில் நம்ம தேங்காய் பால் சேர்க்க போறோம். உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்க பாதாம் பால் மோர் இந்த மாதிரி கூட சேர்த்து சாப்பிடலாம்.

இதுக்கு மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் பூண்டு ஊறுகாய் எல்லாம் சூப்பரான காமினேஷனாக இருக்கும். இன்ஸ்டன்டா கூட மாங்காய் ஊறுகாய் மாங்காய் மசாலா இந்த மாதிரி செஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். காய்ச்சல் வந்தா கூட இந்த கஞ்சி செஞ்சு குடிச்சா கண்டிப்பா காய்ச்சல் கூட சரியாகிவிடும். இந்த சுவையான பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இப்ப வாங்க இந்த சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கருப்பு கவுனி அரிசி கஞ்சி | Kavuni Arisi Kanji Recipe In Tamil

சிறுதானியங்களில் ஒன்றான கருப்பு கவுனி அரிசி நம் அன்றாட வாழ்க்கையில சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிசி என்று சொல்லலாம். காரணம் என்னவென்றால் இந்த அரிசியில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருக்கு. அந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் சிறுதானியங்கள் சாப்பிட்டால் உடம்பில் எந்த நோய்கள் வராது. அந்த காலத்தில் மன்னர்கள் பெரும்பாலும் கருப்பு கவுனி அரிசி தான் சாப்பிடுவாங்க மன்னர்கள் சாப்பிட்ட இந்த கருப்பு கவுனி அரிசியை இப்போ நிறைய பேரு சாப்பிட்டு இருக்காங்க இந்த கருப்பு கவுனி அரிசி வச்சு சாதம் செஞ்சு சாப்பிடலாம் கருப்பு கவுனி அரிசி வச்சு பொங்கல் செய்யலாம். கருப்பு கவுனி அரிசி வச்சு இன்னும் நிறைய லட்டு அந்த மாதிரி கூட ரெசிபி செய்யலாம். அந்த வகையில கருப்பு கவுனி அரிசி வச்சு பாரம்பரியமான ஒரு சூப்பரான கஞ்சி செய்ய போறோம். வாரத்துல ரெண்டு தடவை கருப்பு கவுனி அரிசி கஞ்சி குடித்தால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Kavuni Arisi Kanji
Yield: 2 People
Calories: 160kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி
  • 15 பல் பூண்டு
  • 20 சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 கப் தேங்காய் பால்

செய்முறை

  • கருப்பு கவுனி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து கழுவி வடிகட்டி அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதனை ஒரு குக்கரில் சேர்த்து அரிசி கழுவிய தண்ணீரையும் சேர்த்து பூண்டு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய், சீரகம், இடித்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 3.4g | Protein: 17g | Fat: 1.5g | Sodium: 88mg | Potassium: 197mg | Fiber: 7.6g | Vitamin C: 156mg | Calcium: 24mg | Iron: 33mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கவுனி அரிசி பேரிச்சை அல்வா இப்படி செய்து பாருங்க!

-விளம்பரம்-