பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் உணவுகள் உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்
இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமான சுவையில் இட்லி சாப்பிடலாம். ஆம், இன்று சுவையான கேழ்வரகு இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கேழ்வரகு இட்லி மென்மையாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அதனால் இன்று இந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேழ்வரகு இட்லி | Kelvaragu Idli Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 2 கப் கேழ்வரகு இட்லி
- ¾ கப் உளுந்ந பருப்பு
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் எடுத்து கொண்ட முக்கால் கப் உளுத்தம் பருப்பினை இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின் பெரிய பவுளில் உளுந்தை சேர்த்து ஒரு மணி நேர ஊற வைத்து கொள்ளவும்.
- பின் ஒரு மணிநேரம் ஊறவைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பெரிய பவுளில் 2 கப் அளவு கேழ்வரகு மாவு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளுங்கள்.
- அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவுடன் அரைத்த உளுத்த மாவ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு நாம் தயார் செய்துள்ள மாவை ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்து கொள்ளுங்கள். பின் காலையில் மாவை ஒரு முறை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு வழக்கம் போல் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்து வந்ததும். இட்லி தட்டில் மாவு ஊற்றி வேக வைத்து கொள்ளவும். இருந்தாலும் கேழ்வரகு இட்லி வேக நேரமாகும்.அவ்வளவு தான் சுவையான கேழ்வரகு இட்லி தயார்.