- Advertisement -
தினமும் மதியம் குழம்பு செஞ்சு உங்களுக்கு அலுத்து போச்சா. இதோ ஒரு சுலபமான முறையில அதுவும் கேரளா பாணியில் ஒரு தேங்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இத ஒரு தரம் செஞ்சா போதும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்தத் தொக்கு சாதம், தோசை, கஞ்சி, பழையசோறு என அனைத்து உணவுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
கேரளா தேங்காய் தொக்கு | Kerala Coconut Thokku Recipe in Tamil
தினமும் மதியம் குழம்பு செஞ்சு உங்களுக்கு அலுத்து போச்சா. இதோ ஒரு சுலபமான முறையில அதுவும் கேரளா பாணியில் ஒரு தேங்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இத ஒரு தரம் செஞ்சா போதும். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்தத் தொக்கு சாதம், தோசை, கஞ்சி, பழையசோறு என அனைத்து உணவுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
Yield: 3 People
Calories: 152kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 tsp தேங்காய் எண்ணெய்
- 10 சின்ன வெங்காயம்
- 8 வர மிளகாய்
- 3 Pieces இஞ்சி
- 6 பல் பூண்டு
- புளி எலுமிச்சை அளவு
- 10 கருவேப்பிலை
- 1 கப் துருவிய தேங்காய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் வானொலியில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இரண்டையும் நன்றாக ஆற வைக்கவும்.
- மிக்ஸி ஜாரில் வெங்காயம் மிளகாய் சேர்த்து, இஞ்சி, பூண்டு, புளி, கருவேப்பிலை, துருவிய தேங்காய், உப்பு, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்கவும்
- அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காததால் பார்ப்பதற்கு ஒரு தொக்கு போலவே இருக்கும். இப்போ ஒரு பக்காவான கேரளா பாணியில் தேங்காய் தொக்கு ரெடி.
- வதக்கும் போதும் அரைக்கும் போதும் நாம் சேர்க்கும் தேங்காய் எண்ணெய் தான் இந்த தொக்குக்கு மேலும் சுவையைக் கொடுக்கும்.
Nutrition
Serving: 460G | Calories: 152kcal | Carbohydrates: 4g | Protein: 18g | Fat: 1g | Cholesterol: 2.5mg | Potassium: 612mg | Sugar: 1.5g