Advertisement
சைவம்

வாய்க்கு ருசியான கொள்ளு ரசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? இது போன்ற கடினமான உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அப்பொழுது அதனுடன் நாம் ரசம் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடக்கும்.

இதையும் படியுங்கள் : தமிழரின் பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?

Advertisement

இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். கொள்ளு ரசம் நம் உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய சக்தி கொள்ளுவிற்கு உண்டு மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டா கொள்ளுவை வைத்து எப்படி ரசம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

கொள்ளு ரசம் | Kollu Rasam Recipe in Tamil

Advertisement
Print Recipe
பொதுவாக நாம் ரசம் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். கொள்ளு ரசம் நம் உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய சக்தி கொள்ளுவிற்கு உண்டு மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டா கொள்ளுவை வைத்து எப்படி ரசம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword HORSE GRAM RASAM, கொள்ளு ரசம்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 PERSON
Calories 312

Equipment

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் கொள்ளு
  • பாதி எலுமிச்சை பழம் அளவு புளி கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • ½ tbsp கடுகு                            
  • ¼ tbsp பெருங்காய பொடி
  • 6 பல் பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிது
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் கொள்ளுவை ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து
    Advertisement
    எடுத்துக் கொள்ளுங்கள் கொள்ளு நன்றாக வறுபட்டு வந்ததும் பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நேரத்தில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் சீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு அரை அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு கொள்ளு வெந்து வந்ததும் இன்னும் சற்று தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் அதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளு தண்ணீர் கிடைக்கும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறும் வரை காத்திருக்கவும் என்னை சூடேறியவுடன் கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
  • தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை வடிகட்டி ஊற்றவும் பின்பு இதனுடன் கொள்ளு கரைசலையும் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள சீரகம் மிளகு பூண்டு இவற்றையும் ரசத்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்பு ரசம் கொதிக்கும் பக்குவத்திற்கு வரும் போது கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும் இப்போது சுவையான கொள்ளு ரசம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4gram | Calories: 312kcal | Carbohydrates: 60.9g | Protein: 22g | Saturated Fat: 0.6g | Potassium: 421mg | Fiber: 5g | Calcium: 287mg | Iron: 7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

43 நிமிடங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

3 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

8 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

17 மணி நேரங்கள் ago