- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. தினமும் நாம் விதவிதமான உணவுகளை செய்வோம். ஆனால் ஆரோக்கியமான உணவு செய்கிறோமா என கேட்டல் அது கேள்வியாக இருக்கும்.
இதற்கு ஒரு பதில் உணவாகத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது கொள்ளு சாதம். கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆர்ஸ் கிராம்’ என்று பெயர். கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். உடல் இளைக்க வேண்டும் என விரும்புவார்கள் தினமும் உணவில் கொள்ளினை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண முடியும்.
தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும். இவ்வளவு பயன் கிடைக்கும் கொள்ளில் எப்படி கொள்ளு சாதம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. குழந்தைகள் மட்டுமில்லாம வீட்ல இருக்கக்கூடிய பெரியவர்களும் இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாருங்கள் சுவையான கொள்ளு சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கொள்ளு சட்னி செயவது எப்படி ?
Ingredients
Method
முதலில் கொள்ளுவை இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் கடலை பருப்பு, கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் ஊற வைத்த கொள்ளு, உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கொள்ளு சாதம் தயார்.






