பொதுவா நம்ம சைவம் அசைவம் அப்படின்னு என்ன ரெசிபி செஞ்சாலும் கடைசியாக கொஞ்சமா கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் ரொம்ப வேக வாசனையாவும் ரெசிபி ரொம்ப சுவையாகவும் இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம கொத்தமல்லியை வச்சு ஒரு சூப்பரான கடையல் செய்யப் போறோம். சுட சுட சாதம் போட்டு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த கொத்தமல்லி கடையலை ஊத்தி நெய் ஊத்தி கூடவே சைட் டிஷ்க்கு அப்பளம் ஊறுகாய் வச்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். கொத்தமல்லியில் சட்னி செய்து இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு கடையல் கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க.
ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் நான் அடிக்கடி இந்த கொத்தமல்லி கீரை கடையல் செய்வீங்க. குழந்தைகளுக்கு இதை செஞ்சு டிபன் பாக்ஸ்க்கு எல்லாம் அனுப்பிவிடலாம் பெரியவங்களும் கூட இதை ஆபீஸ்க்கு போகும்போது லஞ்ச் பாக்ஸ்க்கு கொண்டு போகலாம். இந்த கொத்தமல்லி கடையல் செய்வதற்கு 20 நிமிஷம் தான் தேவைப்படும். அதிகமான நேரமும் தேவைப்படாது. இந்த கடையலை சப்பாத்தி பூரி இட்லி தோசை எல்லாத்துக்குமே சைட் டிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க.
கொத்தமல்லியில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் இருக்கு. கொத்தமல்லி இலைகளில் ரத்தத்தை சுத்திகரிக்கிற தன்மை இருக்கு. அதனால கண்டிப்பா இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். கொத்தமல்லி சட்னி பிடிக்காதவங்க இந்த மாதிரி ஒரு சூப்பரான கொத்தமல்லி கடையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. உடம்புக்கு தேவையான நிறைய சத்துக்கள் கிடைக்கும். இந்த கடையல் செய்றதுக்கு நம்ம துவரம் பருப்பு சேர்க்க போறோம். நீங்க பாசிப்பருப்பு கூட சேர்த்துக்கலாம் இரண்டுமே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி கீரை கடையல் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
கொத்தமல்லி கீரை கடையல் | Kothamalli Keerai Kadayal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 100 கி துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 பச்சை மிளகாய்
- 1 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 10 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 10 சின்ன வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- குக்கரில் துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பு கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சீரகம் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான கொத்தமல்லி கீரை கடையல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!