- Advertisement -
குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொத்தமல்லி சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் : டக்கு டக்குனு 10 நிமிஷத்து சுயைான புதினா சாதம் இப்படி செய்து பாருங்களேன்!
- Advertisement -
இந்த சாதம் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
-விளம்பரம்-
கொத்தமல்லி சாதம் | Kothamalli Rice Recipe In Tamil
குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொத்தமல்லி சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சாதம் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Yield: 4 people
Calories: 106kcal
Equipment
- 1 குக்கர்
- மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் புழுங்கல் அரிசி
அரைக்க:
- 1 டீஸ்பூன் சோம்பு
- 6 வரமிளகாய்
- 3 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கொத்தமல்லி இலை ஒரு கை பிடி
வதக்குவதற்கு:
- 1½ டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் நெய்
- 1 பட்டை
- 4 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 தக்காளி நறுக்கியது
- 1 கேரட் நறுக்கியது
- 1 உருளை கிழங்கு நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
- அடுத்து ஒரு மிக்சியில் சோம்பு, வரமிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, சேர்த்து நன்கு பொரிந்து வரவும்.
- பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெந்து வர வரை வதக்கவும்.
- வெங்காயம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.
- வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும். பிறகு வதங்கியதும் நறுக்கிய உருளை கிழங்கு, கேரட் சேர்த்து 4 நிமிடம் அப்படியே வதக்கவும்.
- பிறகு 2½ கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் ஊறவைத்த அரிசியை வடித்து சேர்த்து கலந்து மிதமான தீயில் மூடி போட்டு 2 விசில் வந்தவுடன் ப்ரெஷர் போனதும் திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.
Nutrition
Serving: 600G | Calories: 106kcal | Carbohydrates: 62g | Protein: 4g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.2mg | Potassium: 163mg | Sugar: 0.5g | Iron: 21mg