கொத்தவரங்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!!

- Advertisement -

கொத்தவரங்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் இருக்கு. கொத்தவரங்காய் வைத்து வத்தல் செஞ்சு சாப்பிடுவாங்க இந்த வெயில் காலத்துல பெரும்பாலும் அதைத்தான் செய்வாங்க. ஆனா ஒரு சிலருக்கு கொத்தவரங்காய் வத்தல் பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வெயில் காலத்துக்கு கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு பழைய சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா கொத்தவரங்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், காரக்குழம்பு சாதம் இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த பொரியலுக்கு கண்டிப்பா எல்லாருமே நிறைய சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் சாப்பாடு கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த கொத்தவரங்காய் பொரியலில் சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம். ஆபீஸ் போறவங்க காலேஜ் போறவங்களுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம் கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்காமல் கொண்டுட்டு வருவாங்க. இதுல நம்ம ஒரு மசாலா அரைச்சு சேர்க்கப்போறோம். தேங்காய், சீரகம் மிளகு, பூண்டு இதெல்லாம் சேர்த்து அரைச்சு லாஸ்ட்டா சேர்க்கும் போது சுவை கூடுதலாகவே இருக்கும்.

அதனால கண்டிப்பா ஒரு தடவை இந்த கொத்தவரங்காய் பொரியல் வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. எப்பவும் பொரியல் ஒரே மாதிரியே செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டேஸ்ட்டா செஞ்சு பாருங்க கண்டிப்பாக எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெசிப்பி எப்படி டேஸ்டா செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

கொத்தவரங்காய் பொரியல் | Kothavarangai Poriyal Recipe In Tamil

கொத்தவரங்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் இருக்கு. கொத்தவரங்காய் வைத்து வத்தல் செஞ்சு சாப்பிடுவாங்க இந்த வெயில் காலத்துல பெரும்பாலும் அதைத்தான் செய்வாங்க. ஆனா ஒரு சிலருக்கு கொத்தவரங்காய் வத்தல் பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வெயில் காலத்துக்கு கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு பழைய சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா கொத்தவரங்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், காரக்குழம்பு சாதம் இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Kothavarangai Poriyal
Yield: 4 People
Calories: 140kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி கொத்தவரங்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு 
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை 2 காய்ந்த மிளகாய் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காயை சேர்த்து எண்ணெயிலேயே 5 நிமிடம் வதக்கவும்.
  • மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொத்தவரங்காய் வெந்ததும் அதில் சேர்த்து இறக்கினால் சுவையான கொத்தவரங்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 140kcal | Carbohydrates: 4.91g | Protein: 13.55g | Fat: 3.7g | Sodium: 105mg | Potassium: 301mg | Fiber: 9.3g | Vitamin C: 124mg | Calcium: 33mg | Iron: 19mg

-விளம்பரம்-