- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கொத்தவரங்காய் வச்சு பொரியல்,சிப்ஸ் எல்லாம் செஞ்சி இருப்பீங்க ஆனா கொத்தவரங்காயையும் தட்டப்பயிரையும் வைத்து ஒரு சூப்பரான கூட்டு செஞ்சு பாருங்க சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். இந்தக் கூட்டு கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரசம் சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் இந்த டேஸ்டான சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த மாதிரி ஒரு ரெசிபியை கண்டிப்பா நீங்க ட்ரை பண்ணி கூட பார்த்து இருக்க மாட்டீங்க. ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கனா கண்டிப்பா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. இந்த சுவையான ரெசிபிக்கு சாம்பார் பொடி சேர்த்து செய்யும் போது சுவை அதிகரிக்கும். நம்ம வீட்ல இருக்கக்கூடிய சிம்பிளான பொருட்களை வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செய்யலாம். எப்போ ஒரே மாதிரியா ரெசிபி செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.
சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த புரட்டாசி மாதத்தில் சைவத்திலேயே நிறைய ரெசிபீஸ் இருக்கு அதையெல்லாம் ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு அசைவம் கூட பிடிக்காமல் போயிடும். அந்த அளவுக்கு இந்த ரெசிபிஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தவரங்காய் தட்டப்பயிறு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நமது பாரம்பரிய சைடிஷா கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
தட்டப்பயிரை வறுத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். கொத்தவரங்காயையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
சிறிதளவு உப்பு போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு கடாயில் என்னை சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
தக்காளி சேர்த்து மசிய வதக்கி சாம்பார் தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தட்டப்பயிறு மற்றும் கொத்தவரங்காய் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
கொத்தமல்லி இலைகள் தூவி வேர்க்கடலை பொடி தூவி இறக்கினால் தட்டப்பயிறு கொத்தவரங்காய் கூட்டு தயார்.






