- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
அசைவ உணவுகளில் மட்டன் என்றால் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் தனி சுவையே ஆகும். மேலும் மட்டன் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக மட்டன் வைத்து வறுவல், குழம்பு, ஈரல் ஃபிரை, குடல் குழம்பு, மட்டன் கிரேவி, ரத்தப் பொறியல், நல்லி சாப்ஸ், மூளை ஃபிரை, தலைக்கறி, சுவரொட்டி என ஆட்டின் வாலைத் தவிர ஏகப்பட்ட வெரைட்டிகளை பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆக பிரித்து பிரித்து செய்யலாம் என்றால் அது மட்டனில் மட்டும் தான் முடியும். அந்த வகையில் நீங்களும் வார விடுமுறையில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
எப்போதும் ஒரே மாதிரி மட்டன் செய்து அலுத்து போய் விட்டாதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் மசாலா அதிகம் சேர்த்து மட்டன் கொத்துக்கறி குழம்பு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். பொதுவாக மட்டன் கொத்து கறிக்கு அறிமுகமே தேவையில்லை ஏனெனில் இவை தமிழகத்தில் அவ்வளவு பிரபலம். குறிப்பாக தமிழக கிராமப்புறங்களில் இதற்கு மவுசு அதிகம். சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்து கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.
பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு இவை ஒரு அசத்தலான சைடிஷ். ஆனால் பரோட்டா கொத்து கறி காம்பினேஷன் தான் பலரின் டாப் சாய்ஸாக இருக்கிறது. இதை சிலர் சிறிது கிரேவியாக சமைத்து சாதத்தில் குழம்பாக ஊற்றியும் உண்கிறார்கள். நாமும் அதே மாதிரி தான் மட்டன் கொத்துக்ககறி குழம்பு எப்படி செய்வதென்று பார்க்க இருக்கிறோம். இந்த மட்டன் கொத்துக்கறி குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி, சாதம், பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இப்போது சுவையான மட்டன் கொத்துக்கறி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் குக்கரில் மட்டன் கொத்துக் கறியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பின் அதே குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை தூவி கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கொத்துக்கறி குழம்பு தயார்.






