Advertisement
ஸ்நாக்ஸ்

காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!

Advertisement

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவைக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவக்காயில் ப்ரை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த கோவைக்காய் ப்ரை சுவையான மற்றும் மொறு மொறுப்பானது. மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். ருசியான இந்த கோவைக்காய் ப்ரை எப்படி செய்வதென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

கோவைக்காய் ப்ரை | Kovakkai Fry Recipe In Tamil

Print Recipe
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம்
Advertisement
சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. இந்த கோவைக்காய் ப்ரை சுவையான மற்றும் மொறு மொறுப்பானது. மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Kovakkai Fry
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 250 கி கோவைக்காய்
  • 1/4 கப் கடலை மாவு
  • 2 டீஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பில்லை

Instructions

  • முதலில் கோவைக்காயை நன்கு கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள கோவைக்காய், அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் பிளவர், காஷ்மீர் மிளகாய்த்தூள், உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோவைக்காயை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு பவுளுக்கு மாற்றி விட்டு அதனுடன் ஆம்சூர் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக பொரித்து இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான, மொறு மொறு கோவைக்காய் வறுவல் தயார். இது அனைத்து வகை சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 60kcal | Carbohydrates: 9.8g | Protein: 26.2g | Fat: 2.7g | Saturated Fat: 1.4g | Sodium: 35mg | Potassium: 67mg | Fiber: 2.3g | Vitamin A: 28IU | Vitamin C: 6mg | Calcium: 66mg | Iron: 10mg

இதனையும் படியுங்கள் : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

8 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

8 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

9 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

11 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

12 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

14 மணி நேரங்கள் ago