கோவைக்காய் மிளகு சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் என்ன மாதிரியான உணவுகளை செய்ய வேண்டும் என்ற யோசனை இல்லத்தரசிகளுக்கு அதிகம் இருக்கும்.
இந்த பதிவு பெண்களுக்கு மட்டுமல்ல, வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் ஆண்களுக்கும் உதவியாக இருக்கும். இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் எளிமையானவை தான். இதில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இதை நாம் வாரத்திற்கு ஒரு முறை என்று நம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொள்ளலாம். கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய்.
இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவைக்காயில் சாதம் செய்யும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ருசியான இந்த கோவைக்காய் சாதத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் இந்த கோவைக்காய் மிளகு சாதம் மிகவும் பிடிக்கும் மேலும் அவர்களின் உடம்பிற்க்கும் இவை தெம்பூட்டும்.
கோவைக்காய் மிளகு சாதம் | Kovakkai Milagu Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி கோவைக்காய்
- 2 கப் சாதம்
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 2 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் கோவைக்காயை நன்கு கழுவி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் தீயை குறைத்து வைத்து வதக்கவும். பின் கோவைக்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
- கோவைக்காய் வெந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
- பின் இறுதியாக நெய், மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் மிளகு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இது வரை கோவைக்காயை கொண்டு வறுவல், பொரியல் தான் செய்துள்ளீர்களா? இனி கோவைக்காயில் ஊறுகாய் செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!