- Advertisement -
கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கோவக்காய் கறி கிரேவி செய்வது எப்படி ?
- Advertisement -
சரி, இப்பொழுது அந்த கோவைக்காயை கொண்டு எப்படி பொரியல் செய்யலாம் என்பதை பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்களும் உங்களது வீடுகளில் செய்து பாருங்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த கோவக்காய் பொரியலை விரும்பி சாப்பிடுவார்கள்.
கோவைக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil
கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும். சரி, இப்பொழுது அந்த கோவைக்காயை கொண்டு எப்படி பொரியல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
Yield: 4 people
Calories: 120kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 கப் கோவக்காய் நறுக்கியது
- ½ கப் சின்ன வெங்காயம் நறுக்கியது
- ½ கப் தக்காளி நறுக்கியது
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கடுகு
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- 5 டீஸ்பூன் எண்ணெய்
- கருவேப்பிலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
- பிறகு அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், கோவைக்காயை போட்டு வேகவைத்து இறக்கவும்.
- இப்பொழுது சுவையான கோவைக்காய் பொரியல் தயார்.
Nutrition
Serving: 300gram | Calories: 120kcal | Carbohydrates: 3g | Protein: 15g | Saturated Fat: 0.7g | Sodium: 6mg | Potassium: 356mg | Fiber: 4g | Sugar: 1.08g | Iron: 2mg