- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் உணவு கலச்சாராத்தில் பல வித உணவு வகைகள் பெருகி விட்டன. இவை தவிர பாராம்பரிய உணவுகளை மாடார்ன் உணவுகளாக மாற்றும் முயற்சிகளும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நம்முடைய வீடுகளிலும், கிராமத்திலும் செய்யப்படும் உணவுகளின் சுவையே தனிதான். கோவில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் நம்முடைய கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படம் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரைகளுக்கேன தனித்துவமான டேஸ்ட் உண்டு. சுட சுட, நெய் மணக்க மணக்க இருக்கும் புளியோதரை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி சாப்பிடலாம் என்று தான் பலரும் நினைப்பார்கள்.
சிலர், தயங்காமல் போய் வரிசையில் நின்று வாங்கியும் சாப்பிடுவார்கள். வீடுகளில் செய்யும் புளியோதரை கூட கோவிலில் தரும் சுவையில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புளியோதரை பிரியர்கள் நம் ஊரில் அதிகம். அதுமட்டுமில்லை லஞ்ச் பாக்ஸ் ஈஸி ரெசிபியாகவும் இந்த புளியோதரை உள்ளது. அவற்றை நாம் உண்ணும்போதே அதே போன்று நாமும் தயார் செய்ய வேண்டும் என்றும் தோன்றும். இருப்பினும் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி செய்து போன்று நினைத்து மனதை குழப்பி கொள்ள வேண்டாம். கோவில் ஸ்டைல் புளியோதரைக்கான பக்குவம் இதோ!
இதனையும் படியுங்கள் : ருசியான கோவில் அன்னதான மிளகு பொங்கல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் சாதத்தை உதிரகயாக வடித்து விட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளி கரைசலில் ஊற்றி அதனுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பின் இது நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின் இந்த கலவையை சூடான சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோவில் புளியோதரை தயார்.






