- Advertisement -
சப்பாத்திக்கு எப்பொழுதும் குருமா, கிரேவி என்று செய்யாமல் இது போன்று குடைமிளகாய் சப்ஜி செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
- Advertisement -
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
குடைமிளகாய் சப்ஜி | Kudaimilagai Sabji Recipe In Tamil
சப்பாத்திக்கு எப்பொழுதும் குருமா, கிரேவி என்று செய்யாமல் இது போன்று குடைமிளகாய் சப்ஜி செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 5 குடைமிளகாய்
- 2 பெரிய வெங்காயம்
- 2 டீஸ்பூன் காரப்பொடி
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 4 டீஸ்பூன் கடலை பொடி
- 5 ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து பொரித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- சற்று வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- குடைமிளகாய் நன்கு வெந்ததும் செய்து வைத்துள்ள கடலை பொடியை சேர்த்து கிளறவும்.
- இறக்கி வைத்து மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.