- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கும்பகோணம் கடப்பா கடைசல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்
சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கும்பகோணம் கடப்பா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் கடாயில் பாசிப்பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும்.
பின்னர் குக்கரில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் வெங்காயத் துருவல், பொரிகடலை, கசகசா, இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பிரியும் வரை வதக்கி கொண்டு பின் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும். சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
தண்ணீர் ஊற்றி கொஞ்ச நேரம் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதி வற்றியவுடன் மசித்த பாசிப்பருப்பை அதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான கும்பகோணம் கடப்பா தயார்






