மென்மையான குதிரைவாலி ஆப்பம் செய்வது எப்படி ?

- Advertisement -

இப்பொழுதுலாம் எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஹோட்டல் எங்கேயாவது செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள் நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து கொடுக்கலாலம் அதுவும் சுவையான குதிரைவாலி ஆப்பம் தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில்

-விளம்பரம்-

இதையும் படியுஙகள் : பஞ்சு போன்று சுவையான தேங்காய் தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் படித்த உணவாக மாறிவிடும். ஆதனால் இன்று இந்த குதிரைவாலி ஆப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

குதிரைவாலி ஆப்பம் | Kuthiraivali Appam Recipe in Tamil

இனி நீங்கள் வீட்டிலேயே ஆப்பம் செய்து கொடுக்கலாலம் அதுவும் சுவையான குதிரைவாலி ஆப்பம் தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Appam, ஆப்பம்
Yield: 4 people
Calories: 116kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 ஆப்ப கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி
  • 1 கப் கார் அரிசி
  • ¼ கப் உளுந்து
  • 1 tbsp வெந்தயம்
  • 2 கப் துருவிய கருப்பட்டி
  • ½ கப் இளநீர்

செய்முறை

  • முதலில் நாம் எடுத்து கொண்ட ஒரு கப் குதிரைவாலி உடன் ஒரு கப் கார் அரிசி, கால் கப் உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் அனைத்தயும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
  • பின் இதனுடன் தண்ணீர் ஊற்று இரண்டு மூன்று முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின் இதனுடன் மறுபடியும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின் அனைத்து பொருட்களும் நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்த மாவுடன் புளித்த இளநீரை சேர்த்து கரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.
  • பின் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கருப்பட்டி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கருப்பட்டி கரையும் வரை அடுப்பில் வைத்து இறக்கி கொள்ளுங்கள். பின் கரைத்த பாகை வடிகட்டி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான குதிரைவாலி ஆப்பம் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 120gram | Calories: 116kcal | Carbohydrates: 73g | Protein: 23g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Cholesterol: 8mg | Sodium: 2mg | Potassium: 342mg | Fiber: 2g | Sugar: 0.5g | Calcium: 12mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here