மணக்க மணக்க நாவில் கரையும் குதிரைவாலி அரிசிப் பொங்கல் எப்படி வைக்கணும் தெரியுமா ? நாவில் கரையும் வெண்பொங்கல் வைக்க பச்சரிசி தான் வேண்டும் என்று இல்லை. குதிரைவாலி அரிசியில் ரொம்ப சுவையாக இப்படி செய்யும் பொழுது பொங்கல் அருமையாக வரும். நீங்களும்
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பொங்கல் புளிக்கறி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பத்து நிமிஷத்தில் குதிரைவாலி அரிசிப் நாவில் கரையக்கூடிய மணக்க மணக்க பொங்கல் ரெசிபி இதே மாதிரி ட்ர பண்ணி பாருங்க, இனி அடிக்கடி குதிரைவாலி அரிசிப் பொங்கல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க. இந்த பொங்கல் எப்படி செய்வது பார்ப்போமா ?
-விளம்பரம்-
குதிரை வாலி அரிசி பொங்கல் | Kuthirai Vali Pongal Recipe in Tamil
மணக்க மணக்க நாவில் கரையும் குதிரைவாலி அரிசிப் பொங்கல் எப்படி வைக்கணும் தெரியுமா ? நாவில் கரையும் வெண்பொங்கல் வைக்க பச்சரிசி தான் வேண்டும் என்று இல்லை. குதிரைவாலி அரிசியில் ரொம்ப சுவையாக இப்படி செய்யும் பொழுது பொங்கல் அருமையாக வரும். நீங்களும் பத்து நிமிஷத்தில் குதிரைவாலி அரிசிப் நாவில் கரையக்கூடிய மணக்க மணக்க பொங்கல் ரெசிபி இதே மாதிரி ட்ர பண்ணி பாருங்க, இனி அடிக்கடி குதிரைவாலி அரிசிப் பொங்கல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க.
Yield: 4 People
Calories: 210kcal
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரை வாலி அரிசி
- 1/4 கப் பாசி பருப்பு
- 1 Tbsp மிளகு
- 1 Tbsp சீரகம்
- முந்திரி சிறிது
- 2 Tbsp நெய்
- 1 சிறிய துண்டு இஞ்சி
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கடாயை அடுப்பில் அதில் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் குதிரைவாலி அரிசியைக் இரண்டு முறை தண்ணீர் வைத்து களைந்து கொள்ளவும்.
- பின் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் குதிரை வாலி, வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பின மூன்று கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
- பின் குக்கர் பிர்ஷர் இறங்கியதும் திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி மற்றும் பருப்பைக் கரண்டியால் இலேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்குத் தேவையான அளவிற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
- பின்னர் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், மிளகு, சீரகம், முந்திரி போட்டுச் சிவக்க வறுக்கவும். அதன் பிறகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துப் பொங்கலில் சேர்க்கவும்.
Nutrition
Serving: 670G | Calories: 210kcal | Carbohydrates: 82g | Protein: 12g | Fat: 1g | Cholesterol: 0.2mg | Potassium: 316mg | Fiber: 4g | Sugar: 0.5g | Iron: 0.2mg