- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- snacks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீல் மேக்கர் வைத்து லெமன் சோயா செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது இந்த லெமன் சோயா செய்து கொடுங்கள்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் பஜ்ஜி, வடைன்னு செய்து கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை லெமன் சோயா செய்து கொடுங்கள் கண்டிப்பா சாப்பிட்டு அசந்து போய்டுவார்கள். இது கூட கொஞ்சமா தக்காளி சாஸ் அல்லது பச்சை சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவாக மீல் மேக்கர் வைத்து பொரியல், கூட்டு மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அதனால் இந்த மாதிரி செய்து பாருங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான லெமன் சோயா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சோயா பிரியாணி எப்படி செய்வது
Ingredients
Method
முதலில் மீல் மேக்கரை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு சோள மாவு, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின் இவை சிறிது கெட்டியானதும் பொரித்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து அதனுடன் பெரி பெரி மசாலா சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான லெமன் சோயா தயார்.






