தயிர் சாதத்துக்கு இந்த மாதிரி மா இஞ்சி தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

- Advertisement -

ஊறுகாயை பொறுத்த வரைக்கும் நிறைய வகைகள் இருக்கு. பூண்டு ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். பொதுவா ஒரு சாப்பாடு நம்மளால சாப்பிட முடியலன்னா ஊறுகாய் இருந்தா போதும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க. கடைகளில் நிறைய ஊறுகாய் ரெசிப்பீஸ் இருந்தாலும் வீட்ல ஊறுகாய் செய்ற மாதிரி வராது. வீட்ல செய்ற ஊறுகாய ஸ்டோர் பண்ணி வச்சு நிறைய நாட்கள் யூஸ் பண்றது அது தனி வகையான ஒரு சந்தோஷம் அப்படின்னே சொல்லலாம்.

-விளம்பரம்-

அதுலயும் நம்ம செய்ற ஊறுகாய் டேஸ்ட்டா கிடைச்சிருச்சு அப்படின்னா நமக்கு மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும். அத கெட்டுப்போகாமல் சூப்பரா ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டோம் அப்படின்னா அது இன்னும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த வகையில என்னதான் நிறைய ஊறுகாய் வகைகள் இருந்தாலும் இன்னைக்கு நம்ம மா இஞ்சி வச்சு ஒரு சூப்பரான ஒரு ஊறுகாய் செய்ய போறோம். இந்த ஊறுகாய் ரெசிபி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அப்படி இல்லனா பழைய சாதத்துக்கு இதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா எவ்வளவு இருந்தாலும் பழைய சாதம் காலியாகிடும்.

- Advertisement -

அந்த அளவுக்கு மா இஞ்சி ஊறுகாய் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான இஞ்சி ஊறுகாய் டேஸ்ட் எல்லாரோட நாக்குலயும் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும் இதுல நம்ம நார்மல் இஞ்சி சேர்க்கலாமா அப்படின்னு கேட்டா அதுவும் சேர்க்கலாம். ஆனா மா இஞ்சி சேர்த்துக்கிட்டா இன்னும் சுவை கூடுதலா இருக்கும். தயிர் சாதத்துக்கு இந்த இஞ்சி ஊறுகாய் வைத்து சாப்பிடும்போது ரெண்டு தட்டு தயிர் சாதம் கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

டேஸ்டான சுவையான இந்த இஞ்சி ஊறுகாய் வீட்டிலேயே சூப்பரா செய்யலாம் அது கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு ஒரு கண்ணாடி பாட்டில்ல தண்ணி இல்லாம தொடச்சிட்டு வெயில்ல காய வச்சு அதுல ஊறுகாய் சேர்த்து நிறைய நாட்களுக்கு ஸ்டோர் செய்து வச்சுக்கலாம். உங்களுக்கு மா இஞ்சி கிடைச்சது அப்படின்னா கண்டிப்பா அத வச்சு இந்த இஞ்சி ஊறுகாய் ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்ல இருக்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான மா இஞ்சி ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

மா இஞ்சி தொக்கு | Maa Inji Thokku Recipe In Tamil

ஊறுகாயை பொறுத்த வரைக்கும் நிறைய வகைகள் இருக்கு. பூண்டு ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். பொதுவா ஒரு சாப்பாடு நம்மளால சாப்பிட முடியலன்னா ஊறுகாய் இருந்தா போதும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க. கடைகளில் நிறைய ஊறுகாய் ரெசிப்பீஸ் இருந்தாலும் வீட்ல ஊறுகாய் செய்ற மாதிரி வராது. வீட்ல செய்ற ஊறுகாய ஸ்டோர் பண்ணி வச்சு நிறைய நாட்கள் யூஸ் பண்றது அது தனி வகையான ஒரு சந்தோஷம் அப்படின்னே சொல்லலாம். அதுலயும் நம்ம செய்ற ஊறுகாய் டேஸ்ட்டா கிடைச்சிருச்சு அப்படின்னா நமக்கு மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும். அத கெட்டுப்போகாமல் சூப்பரா ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டோம் அப்படின்னா அது இன்னும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Maa Inji Thokku
Yield: 5 People
Calories: 72kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 50 கி இஞ்சி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 துண்டு வெல்லம்

செய்முறை

  • இஞ்சி கழுவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் கடுகு வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
  • புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான மா இஞ்சி ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 72kcal | Carbohydrates: 2.5g | Protein: 13g | Fat: 2.4g | Sodium: 142mg | Potassium: 175mg | Fiber: 9.41g | Vitamin C: 230mg | Calcium: 18mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : இஞ்சி புளி ஊறுகாய் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

-விளம்பரம்-