- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க. இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதனை மிகவும் லயித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் சமைப்பார்கள். உதாரணமாக செட்டிநாடு ஸ்டைல், மதுரை ஸ்டைல், நெல்லை ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். அந்த வகையில் இன்று நாம் மதுரை ஸ்டைலில் சிக்கன் சமைக்க உள்ளோம். சிக்கன் சுக்காவை மதுரை ஸ்டைலில் எப்படி சமைப்பது என்பது தெரியாதா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி, சிக்கன் இதுபோன்ற ஒரே மாதிரியான ரெசிபி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்றைய சமையல் குறிப்பு பதிவானது கொஞ்சம் புதுசா இருக்கும். வீடே மணக்க மதுரை சுவையில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த சிக்கன் சுக்காவை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து அனைவருக்கும் பறிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக மாறிப் போகும். அதனால் அடுத்த முறையும் உங்களை இதே போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சுக்கா சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இன்று மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இனி சிக்கன் வாங்கினால் மிஸ் பண்ணாம ருசியான பஞ்சாப் சிக்கன் கறி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் அதில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து கலந்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் ஊற்றாமல் எண்ணெயிலே சிக்கனை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா தயார்.






