Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் பணம் வீடு தேடி வர மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க செய்ய வேண்டியவைகள்

பணம் வீடு தேடி வர மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க செய்ய வேண்டியவைகள்

பணத்தை சம்பாதிக்க நாம் பல வகைகளில் உழைத்து முன்னேறிக்கொண்டே இருந்தாலும் திடீரென ஒரு சிலருக்கு வேலையில் திருப்பங்களும், எதிர்பாராத விதமாக நோய் நொடிகள் ஏற்பட்டு அதன் மூலம் மருத்துவமனைக்கு பல லட்சம் செலவு செய்து பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஏன் இந்த மாதிரி எல்லாம் கஷ்டங்கள் வருகிறது என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.அப்படி தொடர்ச்சியாக அதிகமான பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தால் அந்தப் பிரச்சினைகளை சரி செய்ய நாம் ஒரு சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த பரிகாரங்களை நாம் முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்தால் மட்டுமே போதும் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் பண வரவும் அதிகரிக்கும்

-விளம்பரம்-

பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டியவை

நாம் ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுவோம் அது நமக்கு கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் கொடுத்து விடும் அந்த தவறுகளை நாம் திருத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பண வருமானத்திற்கு ஏற்றவாறு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும் நம் வீட்டில் செல்வம் பணம் அதிகரிக்க மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் அதனால் மகாலட்சுமி தேவியாருக்கு பிடித்தமான ஒரு சில விஷயங்களை நாம் செய்தால் நமக்கு பணம் அதிக அளவில் கிடைக்கும் அப்படி நாம் செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை குபேரனுக்கு ஏற்ற இந்த வியாழக்கிழமையில் நாம் செய்வதால் இரண்டு மடங்கு நமக்கு அதனுடைய பலன் கிடைக்கும் அதோடு சேர்ந்து குரு புஷ்ய யோகம் இருந்தால் மிகவும் சிறப்பானது குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு விட்டு ஒரு சில விஷயங்களை நாம் செய்வதால் வீட்டில் பணம் அதிகமாக சேரும்.

குபேர பூஜை

குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகள் குபேர பகவானுக்கு விளக்கு ஏற்றி அதற்கு முன்னால் அமர்ந்து மனதார வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்திவிட்டு உங்கள் வீட்டில் இருக்கும் குபேர பகவானின் திரு உருவப்படம் அல்லது குபேரருடைய சிலையை சுத்தம் செய்து அதற்கு பன்னீர் தடவி சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து பூக்களால் அலங்கரித்து பூஜை அறையை நன்றாக தயார்படுத்தி பின்பு பூஜை அறையில் மண் விளக்கு வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் இரண்டு ஏலக்காய்களை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி குபேரருக்கு நெய்வேத்தியமாக உங்களால் முடிந்த சில இனிப்பு பொருட்கள் அல்லது பழங்களை வைத்து முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

குபேரருடைய மந்திரம்

நாம் ஏற்றி வைத்துள்ள அந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து கொண்டு “ஓம் லட்சுமி குபேராய நமஹ” அல்லது “ஓம் மகாலட்சுமியே போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை கூறி பூக்களை விளக்கிற்கு முன்பாக போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையில் முடிந்த பிறகு குபேரரையும் மகாலட்சுமி தேவியாரையும் உங்களுடைய தெய்வத்தையும் மனதார நினைத்து பண வருமானம் அதிகரிக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூறி வேண்டிக் கொள்ள வேண்டும்.

குபேரனுடைய அருள் கிடைக்க செய்ய வேண்டியவை

தொடர்ந்து எல்லா வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையை செய்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும் ஆனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்த விளக்கில் உள்ள எண்ணெயை மாற்றி விளக்கை சுத்தப்படுத்தி துடைத்து விட்டு முதலில் இருந்த விளக்கு திரியை கால்படாத இடத்தில் போட்டு விட்டு நாம் பயன்படுத்திய நாணயத்தை நன்றாக துடைத்து விட்டு மறுபடியும் விலகில் புதியதாக எண்ணெய் ஊற்றி புதிய திரி போட்டு அதில் நாணயத்தையும் புதிய ஏலக்காயையும் போட்டு விளக்கு ஏற்றலாம். இந்த பூஜையை நாம் எந்த கணக்கில் வேண்டுமானாலும் செய்யலாம் தொடர்ந்து ஐந்து பாரம் ஏழு வாரம் இல்லையென்றால் 11 வாரம் கூட செய்யலாம் இந்த பூஜையை செய்து முடித்துப் பிறகு அந்த நாணயத்தை நன்றாக துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நாம் எந்த இடத்தில் பணம் வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் அந்த நாணயத்தை வைத்து விட்டால் போதும் குபேரருடைய அருளால் வீட்டில் செல்வமும் பணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

நெல்லிக்காய் பரிகாரம்

தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் வீடு தேடி அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறப்படுகிறது.நாம் நெல்லிக்காய் சாப்பிடும்போது தனியாக எடுத்து அதன் மேல் உள்ள சதைப்பகுதிகளை நீக்கிவிட்டு நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்து வெயிலில் காயவைத்து அதன் பிறகு ஒரு வெள்ளை நிற துணியை விரித்து அதன் நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து விட வேண்டும் இப்படி நீங்கள் இதனை சரியாக செய்து வைத்துவிட்டால் போதும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் எதிர்பார்க்காத வருமானம் கிடைத்து அது நிலையானதாகவும் மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு முறை பழைய நெல்லிக்காய் கொட்டைகளையும் மாற்றி விட்டு புதிய நெல்லிக்காய் கொட்டைகளை துணியில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பழைய நெல்லிக்காய் கொட்டைகளை யாருடைய காலும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

வாசனை முடிச்சு

பச்சைக் கற்பூரம் சோம்பு, ஏலக்காய் இவையும் அனைத்தையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி வீட்டின் குபேர மூலையில் வைத்து தினமும் அதற்கு தீப தூப ஆராதனை காட்டி வரவேண்டும். பண வரவை இழுத்துக் கொடுக்கக்கூடிய லவங்கப்பட்டையில் பத்து ரூபாய் தாளை சுற்றி வைத்து அதனை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். மேலும் நாம் பயன்படுத்தக்கூடிய பரிசல் புதினா இலைகளை வைக்கலாம் அதுவும் பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை புதிய புதினா இலைகளை மாற்றி வைக்க வேண்டும்.

பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் வெந்தயம்

பணத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய வெந்தயத்தை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு சமையல் அறையில் வட கிழக்கு மூலையில் வைத்து வந்தால் சமையல் அருகில் உணவு பொருட்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது வாரத்திற்கு ஒருமுறை பழைய வெந்தயத்தை ஓடும் தண்ணீரில் போட்டுவிட்டு புதியதாக மாற்றி விடலாம்

-விளம்பரம்-

பணத்தை ஈர்க்கும் வில்வமரம்

வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களில் வில்வம் மரம் இருந்தால் தவறாமல் திங்கட்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் தோறும் ஐந்து முறை சுற்றி வந்தால் நல்லது உங்களால் முடிந்த அளவிற்கு 21 முறை கூட சுற்றலாம் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது சுற்றுவது மிகவும் நல்லது அப்படி செய்து வர நம் வீட்டில் நிரந்தரமான ஒரு வருமானத்திற்கு வழி கிடைத்து பண வரவு அதிகரிக்கும்

மகாலட்சுமியின் அருள்

வீட்டில் அமைதி இருந்தால் மகாலட்சுமி தேவியார் ஆனந்தமாக அந்த வீட்டில் குடியிருப்பார்கள். எந்த ஒரு வீட்டில் பொறுமையும் நிதானமும் அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியார் பாசம் செய்வார் நாம் செய்கின்ற காரியங்கள் அனைத்தையும் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்டு வந்தால் நமக்கு மிகவும் நல்லது. மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து பரிகாரங்களையும் நாம் சரியான முறையில் முழுமனதோடு செய்து வந்தால் பண வருமானம் அதிகரித்து செல்வ வளமும் வீட்டில் அதிகரிக்கும்.