ஒவ்வொரு வீட்டிலும் மகாராணியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள்தான் அம்மா மனைவி மகள் அக்கா தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்த வேண்டும். அவர்களை மகாராணி போல் நாம் நடத்தினால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்கி அதனால் நம் வீட்டிற்கு செல்வமும் வந்து தங்குமாம். பெண்களை மிகவும் இழிவாக நடத்துபவர்களின் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் நிச்சயமாக வரமாட்டாள். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களை நல்ல முறையில் நடத்தி அவர்களை மகாலட்சுமி போல் மகாராணி போல் நடத்தினால் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் வருவார்.

பெண்களை மதித்தல்
வீட்டில் உள்ள பெண்களை மரியாதையோடு நடத்த வேண்டும் மதிக்க வேண்டும் என்று கூறுவதற்கான காரணம் என்னவென்றால் பெண்களை மதிக்காவிட்டால் அவர்களிடத்தில் செல்வம் நிலைக்கவே நிலைக்காது. இப்பொழுதெல்லாம் பெண்களை மதிப்பது கிடையாது அப்படி மதிக்காமல் என்னதான் பூஜை வழிபாடு என்று செய்தாலும் அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்காது. எனவே சக மனிதர்களை முக்கியமாக பெண்களை மரியாதையோடு மதிப்போடு நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வர செய்ய வேண்டிய பரிகாரம்
ஸ்வஸ்திக் சின்னம் என்பது நான்கு திசைகளில் இருந்தும் நன்மையை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு சின்னம். பசு நெய் மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு பொருள். பூக்களுக்கு அனைத்து தெய்வங்களும் மயங்கி விடுவார்கள் மகாலட்சுமி தேவியாரும் அதேபோல்தான் பூக்கள் என்ன கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளலாம் இல்லையென்றால் ஒரே ஒரு தாமரை பூ போதுமானது. பஞ்சபூதங்கள் வாசனை செய்யக்கூடிய மண் அகல் விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கு ஏற்ற வேண்டிய முறை
முதலில் உங்களுடைய பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்த அனைத்து தெய்வங்களின் திருவுருவ படத்தையும் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தேவியாரின் படத்திற்கு பூக்கள் வைத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவில் மஞ்சள் தூள் கலந்து அரிசி மாவை மஞ்சள் நிறமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் அரிசி மாவு மீது ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதன் மேல் அகல் விளக்கு வைத்து பசு நெய் ஊற்றி மூன்று டைமன் கற்கண்டு போட்டு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கிற்கு முன்னால் அமர்ந்து கையில் குபேர முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டு “ஓம் ஸ்ரீம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அப்பொழுது மனதில் முழுவதுமாக மகாலட்சுமி தேவியாரை நினைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது வாழ்க்கையில் நீங்கள் மனநிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறீர்கள் என்று கிடைக்காததை கிடைத்தது போல் நினைத்து குபேர முத்திரையை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

நெய்வேதியம்
மாதுளம் பழம் கிடைத்தால் ஒரு கிண்ணத்தில் மாதுளம் பழம் முத்துக்களை போட்டு மகாலட்சுமி தேவியாருக்கு முன்னால் வைத்து பிரார்த்தனை செய்து முடிந்த பிறகு அந்த மாதுளம் பழ முத்துக்களை நீங்கள் சாப்பிட வேண்டும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து 48 வியாழக்கிழமைகள் செய்து வந்தால் போதும் நீங்கள் நினைத்தபடி உங்களுடைய பண கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து கடன் இல்லாத வாழ்க்கை அமைந்து நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். இந்த ஒரு பரிகாரத்தை முழு மனதோடு செய்தால் போதும் மகாலட்சுமி தேவியார் உங்கள் வீட்டில் வந்த நிரந்தரமாக அமர்ந்து விடுவாள்




