- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
எப்பொழுது ஒரே மாரி டிபன் செய்து கொடுக்காமல் காலை உணவுக்கு இனி இப்படி ஒரு முறை மல்லி இட்லி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் இட்லி மாவை சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து, இலைகளை நறுக்கிக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், நறுக்கின மல்லி, பச்சைமிளகாய், புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
வதங்கியதும் அதனை இறக்கி நன்கு ஆற வைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து மீண்டும் வாணலியில் நெய்யைக்ஊற்றி காய்ந்ததும் கடுகு, தாளித்து, அரைத்த சட்னி, இட்லிகளைப் போட்டு ஒன்றாய் கிளறி இறக்கவும்.மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.






