பொதுவா வாரத்தில் இரண்டு நாட்களில் கீரைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரைகள் சேர்த்துக் கொள்வதால் உடம்பில் இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் சரியாகும். முக்கியமாக ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறவங்க இரும்புச்சத்து உடம்பில கம்மியா இருக்கிறவங்க வாரத்துல மூணு நாள் கூட கீரை சேர்த்துக்கலாம். கீரையில் வல்லாரை கீரையும், முருங்கைக் கீரை, அரைக்கீரை, சிறுகீரை, குப்பைக்கீரை, மிளகு தக்காளி கீரை அப்படின்னு நிறைய வகைகள் இருக்கு. எந்த கீரை சமைச்சு சாப்பிட்டாலும் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம மணத்தக்காளி கீரை வச்சு ஒரு சூப்பரான தேங்காய்ப்பால் கூட்டு செய்ய போறோம். மணத்தக்காளி கீரைக்கு இன்னொரு பெயர் மிளகு தக்காளி கீரை. பாசிப்பருப்பு தக்காளி எல்லாம் எப்படி சேர்த்து நல்லா கடைந்து இந்த ரெசிபி செய்யும்போது அவ்ளோ ருசியாக இருக்கும். பொதுவா மற்ற கீரைகளை விட இந்த மணத்தக்காளி கீரை சாப்பிடுவதன் மூலமாக வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும். அதனால கண்டிப்பா இந்த மணத்தக்காளி கீரையை வாரத்துக்கு ஒரு தடவை சேர்த்துக் கொள்ளலாம்.
அதிகமான மாத்திரை மருந்துகள் சாப்பிடறவங்க கண்டிப்பா இந்த கீரையை வாரத்துக்கு ஒரு தடவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கீரை சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும் ஒரு சிலருக்கு கீரையே பிடிக்காது. முக்கியமா குழந்தைகளுக்கு பிடிக்காது. அந்த மாதிரி பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான தேங்காய் பால் கூட்டு செஞ்சு கொடுங்க. கீரையில் இருக்கக்கூடிய கசப்புத் தன்மையை இந்த தேங்காய் பால் எடுத்துடும்.
அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும். நீங்க பலவிதமான கீரை கூட்டு ரெசிபி செஞ்சுருப்பீங்க கீரை பொரியலும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும். இதுக்கு சைடிஷ்ஷா லைட்டா ஊறுகாயை தொட்டுக்கலாம் அவ்ளோ ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த சத்தான சுவையான மணத்தக்காளி கீரை வச்சு செய்யக்கூடிய மணத்தக்காளி தேங்காய் பால் கீரை கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மணத்தக்காளி தேங்காய் பால் கீரை கூட்டு | Manathakkali Coconut Milk Keerai Kootu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு மணத்தக்காளி கீரை
- 1 கப் தேங்காய் பால்
- 50 கி பாசிப்பருப்பு
- 3 தக்காளி
- 15 சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 5 பல் பூண்டு
- 2 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பு தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கியதும் மணத்தக்காளி கீரையை சேர்த்துக் கொள்ளவும்.
- லேசாக வதக்கியதும் பருப்பு தக்காளியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான மணத்தக்காளி தேங்காய் பால் கீரை கூட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சூப்பரான மணத்தக்காளி தண்டு சூப் இப்படி செய்து பாருங்க! மாலை நேர குடிப்பதற்கு அருமையாக இருக்கும் !