மாம்பழம், தயிர் சேர்த்து சுவையான மாம்பழ லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலா

By Prem Kumar · 23/4/2024

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம். கோடை காலங்களில் லஸ்ஸிக்கான மவுசே தனி. அப்படி ஓர் ஆனந்தம், மனதுக்கு உற்சாகம், இதம் அத்தனையும் தரும். நம் சுவை நரம்புகளைத் தூண்டி நம்மை மெய்மறக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.

லஸ்ஸி வெறும் தாகம் தீர்க்கும் பானம்; உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் பானம். அவ்வளவுதானா? இல்லை. அதோடு, பல மருத்துவப் பயன்களையும் தரக்கூடியது. இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான பானமாக லஸ்ஸி உள்ளது. மேலும் இது ஆரோக்கியமான புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பானமாக உள்ளது. இந்த பாரம்பரிய பானமானது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பானமாக உள்ளது.

தயிரை கொண்டு தயாரிக்கப்படும் லஸ்ஸியானது செரிமான சக்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும். சரி, இந்த பதிவில் சுவையான மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!

Recipes AMP · Quick view
View full