Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mango Lassi
கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலா Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.04.23பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மாம்பழம், தயிர் சேர்த்து சுவையான மாம்பழ லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலா

PK
எழுதியவர்Prem Kumar23 ஏப்ரல், 2024 அன்று 11:00 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம். கோடை காலங்களில் லஸ்ஸிக்கான மவுசே தனி. அப்படி ஓர் ஆனந்தம், மனதுக்கு உற்சாகம், இதம் அத்தனையும் தரும். நம் சுவை நரம்புகளைத் தூண்டி நம்மை மெய்மறக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.

லஸ்ஸி வெறும் தாகம் தீர்க்கும் பானம்; உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் பானம். அவ்வளவுதானா? இல்லை. அதோடு, பல மருத்துவப் பயன்களையும் தரக்கூடியது. இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான பானமாக லஸ்ஸி உள்ளது. மேலும் இது ஆரோக்கியமான புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பானமாக உள்ளது. இந்த பாரம்பரிய பானமானது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பானமாக உள்ளது.

தயிரை கொண்டு தயாரிக்கப்படும் லஸ்ஸியானது செரிமான சக்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும். சரி, இந்த பதிவில் சுவையான மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழம், பால், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்‌ ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் குங்குமப் பூ, மாம்பழ விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் நறுக்கி நட்ஸ், ஐஸ் கட்டிகள் மற்றும் குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மாம்பழ லஸ்ஸி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 99 கலோரி
  • கொழுப்பு · 2.3g
  • புரதம் · 4.1g
  • கார்போஹைட்ரேட் · 2.5g
தலைப்புகள்
#மாம்பழ குல்பி#மாம்பழ கஸ்டர்ட்#மாம்பழ குச்சி ஐஸ்#மாம்பழ லஸ்ஸி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement