- Prep
- 5 min
- Cook
- 10 min
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
என்னதான் மாங்காய் சாப்பிட்டாலும் சூடு பிடிக்கும் அப்படின்னு நமக்கு தெரிஞ்சாலும் சம்மர் வந்தாலே நம்ம எல்லாருக்கும் ஒரே ஜாலியாகிடும். காரணம் இந்த மாங்காய் மாம்பழம் சீசன் தான். இந்த சம்மர் வந்தாலே எல்லார் வீட்டிலேயும் மாம்பழ வாசனையும் மாங்கா வாசனையும் அடிச்சுகிட்டே இருக்கும்.
அந்த அளவுக்கு எல்லார் வீட்லயும் மாங்காய் விரும்பி சாப்பிடுவாங்க. மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம் மாங்காய் சாம்பார் அப்படினு நம்ம வீட்ல செய்ற எல்லாத்தையும் மாங்காய் தான் இருக்கும். மாங்காய் அப்படீன்னு சொன்னாலே சில பேருக்கு நாக்குல எச்சி ஊறும் அந்த அளவுக்கு மாங்காயோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த மாங்காயிலேயே கொஞ்சம் உப்பும் காரமும் போட்டு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
அந்த வகையில இப்ப நம்ம எல்லாருக்குமே புடிச்ச மாங்காய் பச்சடி தான் பாக்க போறோம். நீங்க எல்லாரும் உங்க வீட்ல மாங்காய் பச்சடி செஞ்சுருப்பீங்க ஆனா ஒரு தடவ இந்த மாதிரி மாங்காய் பச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே சூப்பரா நல்லா இருக்கும். அதுக்கப்புறம் நீங்க இந்த மாங்காய் பச்சடிக்கு அடிமை ஆகிடுவீங்க. புளிப்பு காரம் இனிப்பு அப்படின்னு அறுசுவைகளில் நாலு சுவை நிறைஞ்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
சாம்பார் சாதத்துக்கு இந்த மாங்காய் பச்சடி வைத்து சாப்பிட்டால் காம்பினேஷன் ரொம்ப அருமையா இருக்கும். இந்த மாங்காய் பச்சடிய நம்ம அப்படியே கூட சாப்பிடலாம். ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த சம்மர்ல நிறைய மாங்காய் கிடைக்கும்போதே ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு சாப்பிட்டுகோங்க.. உங்க குழந்தைகளுக்கும் செஞ்சு கொடுங்க அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
பிறகு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மாங்காய் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர்சேர்த்து வேக வைக்கவும்
மாங்காய் நன்றாக வெந்தவுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடங்களில் கழித்து இறக்கினால் சுவையான மாங்காய் பச்சடி தயார்.






