மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மாம்பழ போளி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

- Advertisement -

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!

- Advertisement -

போளி என்றால் அனைவருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு ஸ்வீட் வகையாக இருக்கும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மாறாமல் இருக்கும் இதன் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளமானோர் உங்களில் பலரும் இருக்கக்கூடும். கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் போளி‌ எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Print
No ratings yet

மாம்பழ போளி | Mango Poli Recipe in Tamil

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். போளி என்றால் அனைவருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு ஸ்வீட் வகையாக இருக்கும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மாறாமல் இருக்கும் இதன் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளமானோர் உங்களில் பலரும் இருக்கக்கூடும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: poli
Yield: 4 People
Calories: 199kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 மிக்ஸி
 • 1 கடாய்
 • 1 தவா

தேவையான பொருட்கள்

 • 1/2 கப் பழுத்த மாம்பழம்
 • 10 பாதாம்
 • 1 டேபிள் ஸ்பூன் கடலை
 • 1 டேபிள் ஸ்பூன் பால்
 • 1/2 கப் சர்க்கரை
 • 1 கப் மைதா
 • 4 ஏலக்காய்
 • நெய்                             தேவையானஅளவு
 • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

 • முதலில் பாதாம் பருப்பை மிக்ஸியில் தோலுடன் நன்றாக பொடி செய்துக்கவும்.
 • பின் வெறும் கடாயில் கடலைமாவின் பச்சை மணம் போக வறுத்துக் கொள்ளவும்.
 • பின்னர் கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மாம்பழத்தை நன்கு வதக்கவும் நன்கு வதங்கி வரும்பொழுது அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சக்கரை முழுவதும் கரைந்து வரும் வரை நன்கு வேக விடவும்.
 • அத்துடன் கடலைமாவு சேர்த்து நன்றாக கிளறவும், அத்துடன் பால் பவுடர் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
 • கடைசியாக பாதாம் பொடியை சேர்த்து மிதமான சூட்டில் கிளறி விட்டு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சட்டியில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
 • பின்னர் மைதா மாவுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு, 2 ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே எண்ணெய் தடவி 2 மணி நேரம் மூடி வைத்து விடவும்.
 • பின் ஆறின பூரணத்தை கையில் நெய் தடவி சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். மைதா மாவை கொஞ்சமாக எடுத்து உள்ளம் கையில் வைத்து சோப்பு போல் செய்து பூரணத்தை உள்ளே வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும்.
 • அடுப்பில் தவா வைத்து மிதமான சூட்டில் சூடு செய்து கொள்ளவும்.
 • பின்னர் உருட்டி வைத்திருக்கும் மைதா உருண்டையை ஒரு பட்டர் பேப்பரில் வைத்து போளிக்கு தட்டுவது போல் கை அல்லது சப்பாத்தி கட்டை வைத்து மெல்லிசா தட்டி தவாவில் போட்டு சுற்றும் நெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி விட்டு வேக விடவும்.
 • அருமையான வித்தியாசமான் சுவையுடன் கூடிய மாம்பழ போளி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 199kcal | Carbohydrates: 25g | Protein: 1.4g | Fat: 0.6g | Potassium: 277mg | Fiber: 2.6g | Sugar: 22.5g | Vitamin A: 765IU | Vitamin C: 60.1mg