என்ன தான் நம்ம வீட்ல உருளைக்கிழங்கு வறுவல் சேனை கிழங்கு வறுவல் எல்லாமே செஞ்சாலும் கல்யாண வீட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சேனைக்கிழங்கு வருவல் கண்டிப்பா சாப்பிடவே முடியாது. ஆனா கல்யாண வீட்ல செய்யக்கூடிய அந்த சேனைக்கிழங்கு வறுவல் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்று தான். அத வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சேனைக்கிழங்கு வறுவல் சாப்பிட்டா ஒரு சிலருக்கு நாக்குல அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பை வராமல் தடுப்பதற்காக கொதிக்கிற தண்ணில புளியும் மஞ்சள் தூளும் சேர்த்து கலந்து அதுக்கு அப்புறமா சேனைக்கிழங்கு சேர்த்து அரைவேக்காடு வேக வச்சு எடுத்துட்டா கண்டிப்பா சேனைக்கிழங்கு சாப்பிட்டாலும் நாக்குல அரிப்பு ஏற்படாது.
இந்த சேனைக்கிழங்கு ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். ஆனா நம்ம தான் இதுவரைக்கும் ரொம்ப கஷ்டம் அப்படின்னு நினைச்சுகிட்டு வீட்ல இதை ட்ரை பண்ணாமலே இருந்திருக்கோம். ஒரு சிலர் இந்த ரெசிபியை வீட்ல ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க ஆனா தெரியாதவங்க கண்டிப்பா இப்ப நம்ம செய்யப் போற இதே செய்முறைல சேனைக்கிழங்கு வறுவல் செஞ்சீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. உங்க வீட்ல ஏதாவது சின்ன சின்ன விசேஷங்கள் வந்துச்சுன்னா அப்போ இந்த ரெசிபி செஞ்சு அசத்திடுங்க. விசேஷ நாட்கள் மட்டுமில்லாமல் ரசம் சாதம் தயிர் சாதம் செய்யும் போது அதுக்கு சைடு டிஷ்ஷா கண்டிப்பா இந்த சேனைக்கிழங்கு வறுவல் செஞ்சி சாப்பிடுங்க.
சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். எவ்வளவு சாப்பிடுறோம் அப்படின்னு கணக்கே இல்லாம சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு ருசியா இருக்கும். சாம்பார் சாதத்துக்கும் கலவை சாதங்களான புளி சாதம் லெமன் சாதத்துக்கும் கூட இந்த ரெசிபி ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சா செத்துருங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கும் போது அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபியாக இது இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சேனைக்கிழங்கு வறுவல் | Yam Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 சேனைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- புளி நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் புளி சேர்த்து கொதித்ததும் சேனைக்கிழங்கை சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கியதும் சேனைக்கிழங்கு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக வேக வைக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.