- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, evening
பொதுவா ஒரு சிலர் என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சமைச்சாலும் அவங்க வீட்ல எல்லாமே மீதம் இருக்கும். சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா அத ஒரு சிலர் தண்ணி ஊத்தி வச்சு பழைய சாதமா சாப்பிடுவாங்க. இன்னுமொரு சிலர் புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு கிளறி சாப்பிடுவாங்க ஒரு சிலர் அந்த சாதம் வைத்து ஏதாவது ஸ்னாக்ஸ் மாதிரி கூட செய்வாங்க. இந்த மாதிரி சாதம் மீதமாயிடுச்சுன்னா அதுல நிறைய ரெசிபிஸ் செய்ய முடியும்.
அதேபோல் இட்லி மீதம் ஆயிடுச்சி அப்படின்னா அதை வைத்து காலம் காலமா சூரியவம்சம் இட்லி உப்புமா தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா இனிமேல் இட்லி வச்சு ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை மசாலா இட்லி ப்ரை செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். காலையில் சுட்ட இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா குழந்தைகளுக்கு ஈவினிங் டைம்ல அதுல மசாலா இட்லி செஞ்சு கொடுத்து பாருங்க.
ஸ்கூல் விட்டு வர்ற குழந்தைகள் விரும்பி சாப்பிட வாங்க அதே இட்லியை மறுபடியும் கொடுத்தா கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா செஞ்சு வச்சிருந்தீங்க அப்படின்னா கண்டிப்பாக. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஃபர்ஸ்ட் நம்ம இந்த இட்லியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கணும் அதுக்கப்புறம் தான் மசாலா இட்லி செய்யணும்.
நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு செய்யும் போது காரம் கம்மியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட இதை விரும்பி சாப்பிடுவாக அதனால எவ்வளவு இட்லி மீதமாக ஆகி இருந்தாலும் கவலையே படாமல் இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சுடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான மசாலா இட்லி ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
இட்லியை நீளவாக்கில் நறுக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சில்லி சாஸ் தக்காளி சாஸ் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் பொரித்து வைத்துள்ள இட்லியை சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான மசாலா இட்லி பிரை தயார்.






