ஒரு சிலருக்கு சாப்பாடு குழம்பு பொரியல் அப்பளம் அப்படின்னு வச்சு சாப்பிடுவதற்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு கலவை சாதங்கள் வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்தக் கலவை சாதங்களிலேயே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கலவை சாதம் பிடிக்கும். கலவை சாதத்தில் நிறைய வகைகள் இருக்கு லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், கேரட் சாதம், பீட்ரூட் சாதம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில ஒரு சிலருக்கு லெமன் சாதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதையே கொஞ்சம் வித்தியாசமா மசாலா லெமன் சாதமா செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
நல்லா காரசாரமா மசாலா அரைத்து விட்ட இந்த லெமன் சாதம் ஒரு தடவ சாப்பிட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிட தோணும். இந்த லெமன் சாதத்துக்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு வறுவல் அப்பளம் இது செஞ்சுட்டா போதும் ஒரு சூப்பரான லஞ்ச் சாப்பிட்ட ஃபீல் கிடைக்கும். இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே ட்ரை பண்ணி பாருங்க. ஆபீஸ் போறவங்க ஸ்கூல் போறவங்க காலேஜ் போறவங்க எல்லாருமே இதை செஞ்சு கொண்டு போனால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வரலாம்.
அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த மசாலா லெமன் சாதம் கண்டிப்பா வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். லெமன் சாதம் சாப்பிட்ட போரடிச்சவங்க இந்த மாதிரி ஒரு மசாலா லெமன் சாதம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவதற்கு டேஸ்டாக இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான மசாலா லெமன் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மசாலா லெமன் ரைஸ் | Masala Lemon Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 எலுமிச்சை பழம்
- 1/4 கப் தேங்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 கப் வடித்த சாதம்
- 4 காய்ந்த மிளகாய்
- 6 முந்திரி பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை முந்திரி பருப்பு பெரிய வெங்காயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் தேங்காய் துண்டுகள் சீரகம் பூண்டு சிறிதளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனையும் கடாயில் சேர்த்து வதக்கவும்.
- பிறகு எலுமிச்சைச்சாறு மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- இப்பொழுது சாதம் போட்டு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மசாலா லெமன் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!