- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான மசாலா சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், மற்ற சாதத்தை விட சூப்பராக இருக்கும். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த மசாலா சாதம் மிகவும் புதிதானது. தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டன, குழந்தைகளுக்கு பிடித்தவாறு லஞ்ச் செய்து தர வேண்டும். இல்லையென்றால் கொடுத்து விட்ட உணவு அப்படியே வரும். வழக்கமாக செய்யும் உணவுகளை செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும். புது விதமான உணவுகளை தயாரித்து கொடுக்க முயற்சி செய்யலாம். வித்தியாசமான உணவுகள் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கமகம மணத்துடன், அருமையான சுவையுடன் மசாலா சாதம் செய்து கொடுத்து விடலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் விருந்தினர் வீட்டுக்கு திடீரென வந்தாலும் உடனடியாக இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் அந்த அளவுக்கு சுவை சூப்பராக இருக்கும். சாதம் மீதம் ஆயிடுச்சின்னா அதுல எப்பவுமே ஒரே மாதிரியா புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் செய்யாமல் மசாலா அரைத்து போட்டு இந்த மாதிரி மசாலா சாதம் செஞ்சிருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வாருங்கள் இந்த மசாலா சாதத்தை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொரிந்ததும் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியளவு சேர்த்து நன்கு வதக்கவும், அதன்பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மசாலா சாதம் தயார்.






