- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
ஒரு சிலருக்கு வெறும் தோசை சாப்பிடுவதை விட ஆனியன் தோசை ரவா தோசை மசாலா தோசை மசாலா ஸ்டஃப்டு தோசை இதெல்லாம் சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அது சாப்பிடறதுக்கு கடையில தான் போய் சாப்பிடணுமா அப்படின்னு கேட்டா கிடையாது வீட்டிலேயே சூப்பரான சிம்பிளான மசாலா தோசை செஞ்சு சாப்பிடலாம். வீட்ல வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் மல்லித்தூள் இருந்தா போதும் அதை வச்சு ஒரு சூப்பரான மசாலா தோசை செய்யலாம். இந்த மசாலா தோசைக்கு சைடிஷ் கூட தேவையில்லை ஆனா சைடு டிஷ் வேணும் அப்படின்னா நீங்க தேங்காய் சட்னி அரைச்சுக்கலாம் அவ்ளோ ருசியா இருக்கும். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த மசாலா தோசை செஞ்சு கொடுத்து விடலாம். அவங்களுக்கு பிரேக் பாஸ்ட் கும் இத செஞ்சு தேங்காய் சட்னி வச்சு கொடுக்கலாம்.
வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பொதுவான வீடுகள்ல அடிக்கடி செய்யக்கூடியதுனா அது இட்லியும் தோசையும் தான் ஆனா அந்த இட்லி தோசையில ஏதாவது கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு கொடுத்தாதான் சாப்பிடுறதுக்கே பிடிக்கும் இல்லனா வெறுத்து போயிடும் அந்த வகையில இந்த சூப்பரான மசாலா தோசைய அதுவும் ரொம்ப ரொம்ப சிம்பிளா செஞ்சு முடிச்சிடலாம்.கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் மசாலா தோசை அப்படினாலே உங்களுக்கு இந்த தோசை தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவுக்கு இந்த தோசை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும்.
உங்க வீட்ல சாம்பார் இருக்கு அப்படின்னா அதையும் கூட இந்த மசாலா தோசைக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். ஃபர்ஸ்ட் எல்லாம் மசாலா தோசை அப்படின்னு கேட்டா ஹோட்டல்ல உருளைக்கிழங்கு மசால் வச்சி மசாலா தோசை செஞ்சு கொடுப்பாங்க ஆனா இப்போ மசாலா தோசை கேட்டா நல்லா காரசாரமா காளான் மசால் தோசை காலிஃப்ளவர் மசால் தோசை முட்டை மசால் தோசை அப்படின்னு ஸ்டஃப் பண்ணி மசாலா தோசை செஞ்சு தராங்க.
அதே மசாலா தோசையை ஹோட்டல்ல போய் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது நம்ம வீட்லையே சூப்பரா செஞ்சு சாப்பிடலாம். அவ்ளோ ருசியான மசாலா தோசையை ஒரு தடவை உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா போதும் அதுக்கப்புறம் உங்க குழந்தைங்க அந்த மசாலா தோசை வேணும் அப்படின்னா அடம் பிடித்து கேப்பாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த சூப்பரான மசாலா தோசையை செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான சட்டுனு செய்யக்கூடிய மசாலா தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல இட்லி மாவு இல்லனா இந்த ரவா ஊத்தப்பம் செய்யுங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தக்காளியையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்த பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் மசாலா ரெடி.
பிறகு தோசை கல்லில் சிறியதாக ஒரு ஊத்தப்பம் ஊற்றி அதன் மேல் மசாலாவை நன்றாக பரப்பி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து இறக்கினால் சுவையான மசாலா ஊத்தப்பம் தயார்.






