- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா சிக்கன் மட்டன் மீன் எல்லாத்துலயுமே நிறைய ப்ரோடின் சத்துக்கள் இருக்கும். இது எல்லாமே அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு கரெக்டா இருக்கும் ஆனா சைவம் சாப்பிடறவங்களுக்கு புரோட்டின் சத்துக்கள் நிறைந்தது அப்படின்னா அது சுண்டல் பட்டாணி போன்ற பயறு வகைகள் தான். அது இல்ல அப்படின்னா சோயா அப்படின்னு சொல்லப்படுற மீல் மேக்கரில் நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கு. இந்த மீல் மேக்கரில் கிரேவி மீல் மேக்கர் வடை, மீல் மேக்கர் கோலா உருண்டை, மீல் மேக்கர் 65 அப்படின்னா நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம்.
அந்த வகையில் மீல் மேக்கர் வைத்து சிம்பிளான சூப்பரான ஒரு மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இந்த ரெசிபி சப்பாத்தி தோசை எல்லாத்துக்கும் வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும். அதுமட்டுமில்லாம ரசம் சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் பருப்பு சாதம் எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த பெப்பர் ரோஸ்ட் செஞ்சு அதிலேயே சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிட்டு வருவாங்க.
குழந்தைகளுக்கு இந்த மாதிரி டிஃபரண்டான ஏதாவது ரெசிபிஸ் செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ரெசிபியும் கூட. இந்த ருசியான ஆரோக்கியமான சோயா பெப்பர் ரோஸ்ட் ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி. இதுக்கு நிறைய பெரிய வெங்காயம் நறுக்கி போட்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான சோயா பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மீல் மேக்கர் குருமா ஒரு முறை மட்டும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பின் அடிக்கடி நீங்களே விரும்பி செய்வீங்க!
Ingredients
Method
மீல் மேக்கரை சுடுதண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு ஊற வைத்து பிழிந்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்றாக கலந்து வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான மீல்மேக்கர் பெப்பர் ரோஸ்ட் தயார்.






