- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் தேங்காய் துவையல் பருப்பு துவையல் அப்படின்னு செஞ்சாலும் ஒரு சிலருக்கு புதினா துவையல் கொத்தமல்லி துவையல் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். புளி சாதம், லெமன் சாதம் இதெல்லாம் செய்யும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த மாதிரி துவையல் ரெசிப்பீஸ் ஒரு சிலருக்கு ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். அந்த மாதிரி இருக்கிறவங்க இந்த ரெசிபியை மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. புதினா இலைகளையும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சா பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
பழைய சாதம் சுடு கஞ்சி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அருமையாக இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு இந்த துவையல் செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி கொடுத்து விடலாம். அதுக்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு பிரை அப்பளம் ஏதாவது செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் உடம்புல சேர்த்துகிறதால உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
மேலும் உடம்பில் இருக்கக்கூடிய ரத்தத்தை சுத்தம் செய்யும். உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் அதனால இந்த புதினா கொத்தமல்லி இலைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளணும். ஆனா அப்படியே தாளிக்கிறதுக்கு இதை சேர்த்தால் கண்டிப்பாக யாருமே சாப்பிட மாட்டாங்க தூக்கி தான் போடுவாங்க. அதனால இந்த மாதிரி ஒரு துவையல் செய்து கொடுத்துட்டீங்கன்னா கண்டிப்பா இதோட சத்துக்கள் முழுவதுமாக உடம்புல போய் சேரும். இந்த அருமையான ஆரோக்கியமான புதினா கொத்தமல்லி துவையல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலை பருப்பு மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
அதில் பூண்டு தேங்காய் துண்டுகள் புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனை ஏற்கனவே அரைத்து வைத்ததுடன் சேர்த்து உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்ததில் சேர்த்து விட்டால் சுவையான புதினா கொத்தமல்லி துவையல் தயார்.






