- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
இரவு உணவுகளுக்கு பெரும்பாலும் இட்லி, தோசை ஊத்தாப்பம் போன்ற உணவு வகைகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறோம். அதுவும் தினசரி இட்லி என்றால் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும் உணவாக மாறி வருகிறது. குழந்தைகள் இட்லியை கண்டால் ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு இட்லியை கண்டாலே பிடிக்காமல் போய் உள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் இட்லியை சமைக்காமல் அதில் ப்ரை செய்யும் போது அது பாரம்பரிய இட்லிகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவாக மாறும். அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக சுவை, ஆரோக்கியம் நிறைந்த மின்ட் இட்லி ப்ரையை உண்பார்கள்.
ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இட்லி ஃப்ரை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த இட்லி ஃப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இவை காலை மற்றும் இரவு உணவுக்கு சரியான தேர்வாக அமையும்.
இதனையும் படியுங்கள் : இட்லி அவத்து இப்படி ஒரு முறை இட்லி ப்ரை ட்ரை பன்னி பாருங்க! பின் அடிக்கடி வீட்டில் இட்லி ப்ரை தான்!
Ingredients
Method
முதலில் இட்லி மாவை எடுத்து சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் புதினா இலைகளை சேர்த்து பச்சை நிறம் மாறாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் மினி இட்லிகளை சேர்த்து அதனுடன் அரைத்த வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டியெடுத்த இட்லிகளை சேர்த்து மெதுவாக பிரட்டி விடவும்.
பின் மீதமுள்ள பொடியை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான நீலகிரி மின்ட் இட்லி ஃப்ரை தயார்.






