ருசியான மொச்சை பயறு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்! இனி உங்கள் வீட்டில் அடிக்கடி இதனை செய்வீர்கள்!

குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பச்சை மொச்சை வகைகளில் புரதச்சத்து

By Prem Kumar · 16/12/2023

குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பச்சை மொச்சை வகைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது.

தினமும் ஒரு பிடி பயிறு வகை குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் பச்சை மொச்சை பயிரை வேக வைத்து சாப்பிட விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சம் பச்சை மொச்சை சாம்பார் சுவையாக செய்து கொடுக்கலாம். அப்படி மொச்சைப் பயறை வைத்து ஒரு சுவையான பச்சை மொச்சை சாம்பார் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பச்சை மொச்சை சாம்பார்  இப்படி செஞ்சிங்கன்னா, மொச்சை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட, இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.நம்மில் பல பேருக்கு இந்த மொச்சை போன்ற பயிர் வகைகளை அறவே தவிர்த்து விடுவார்கள். இது வரை மொச்சை போட்ட கார குழம்பு வகைகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சமையல் குறிப்பு பகுதியில் நல்ல ஒரு அருமையான பச்சை மொச்சை சாம்பார் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்

Recipes AMP · Quick view
View full