Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைல் முளைகீரை பொரியல் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

கீரை உடலுக்கு உரிய அனைத்து சத்துக்களையும் அடக்கிய ஒரு  உணவு பொருளாகும். கீரைகளை அடிக்கடி நாம் உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. கீரையில் இருக்கும் கால்சியம், விட்டமின்ஸ், நார்ச்சத்து, இரும்பு சத்து உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கின்றன.

கீரையை வாரம் இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை தீரும். செரிமான கோளாறுகள் தீர்ந்துவிடும் . கீரை உண்டால் கீழ் வயிறு  சுத்தமாகும் என்பதற்கு ஏற்ப கீரைகளை உண்ணும் பொழுது குடல் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகிறது. கீரைகளை சூப்பாகவோ, பொரியலாகவோ, குழம்பாகவோ, கூட்டாகவோ, கடையலாகவோ செய்து சாப்பிடலாம். சில கீரைகளை பச்சையாகவே உண்ணலாம்.

Advertisement

கீரைகளை மூலிகை என்று கூறவேண்டும். நாம் இப்போது ஒரு சில கீரைகள் மட்டுமே நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்தக் கீரைகள் வெறும் உணவு பொருள்கள் மட்டுமல்ல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளும் ஆகும். ஆகவே முடிந்த அளவு கீரைகளை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நம் இல்லத்தாருக்கும் மிகவும் நன்மை பயக்கும் .

குழந்தைகளுக்கு கீரைகளை உண்ண வைப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகும். ஆகையால் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு கீரைகளை பழக்கப்படுத்துவதை  நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கீரையில் இருக்கும் நன்மைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். இன்று நாம் முளைக்கீரையை பயன்படுத்தி எப்படி கிராமப்புறங்களில் பொரியல் செய்வார்களோ அதே போல் பொரியல் செய்து சாப்பிட இருக்கிறோம். கிராமத்து ஸ்டைலில் எப்படி அந்த பொரியலை செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்

முளைகீரை பொரியல் | Molaikeerai Poriyal Recipe In Tamil

Print Recipe
கீரைகளை மூலிகை என்று கூறவேண்டும். நாம் இப்போது ஒரு சில கீரைகள் மட்டுமே நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்தக் கீரைகள் வெறும் உணவு பொருள்கள் மட்டுமல்ல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளும் ஆகும். ஆகவே முடிந்த அளவு கீரைகளை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நம் இல்லத்தாருக்கும் மிகவும் நன்மை பயக்கும் .
Advertisement
Course Fry
Cuisine tamil nadu
Keyword Molaikeerai Poriyal
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 337

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு முளைக்கீரை
  • 1 வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 6 பல் பூண்டு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 2 காய்ந்தமிளகாய்

Instructions

  • முதலில் முளைக் கீரையை வாங்கி தூசிகள் இல்லாமல் எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நறுக்கிய முளைக்கீரைகளை நீரில் போட்டு
    Advertisement
    ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு வேலை முளைக்கீரைகள் மண் கலந்திருந்தால் அந்த மண்ணெல்லாம் நீரில் படிய ஆரம்பிக்கும்.
  •  அதன் பிறகு கீரைகளை அலசி எடுத்து மீண்டும் இதே போல் ஒரு இரண்டு மூன்று முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  சுத்தமான கீரையாக இருந்தால் இரண்டு முறை அலசினால் போதும். ஏதாவது மண் இருப்பது போல் இருந்தால் நீங்கள் மூன்று நான்கு முறை அலச வேண்டும். அலசிய கீரைகளை எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.
  • அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள முளைக்கீரை, பூண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  •  மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் கழித்த பிறகு திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். மீண்டும் மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  •  கீரை என்பதால் இவை சீக்கிரம் வெந்துவிடும் ஆகையால் நன்றாக கிளறி தண்ணீர் சுண்டிய பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் கிராமத்து ஸ்டைலில் முளைக்கீரை பொரியல் தயார்.
  • இந்த முளைக்கீரை பொரியலை காரக்குழம்பு ,வத்தல் குழம்பு இவற்றுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 337kcal | Carbohydrates: 12g | Protein: 167g | Saturated Fat: 1.7g | Sodium: 45mg | Potassium: 968mg | Fiber: 67g | Iron: 492mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

14 நிமிடங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

4 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

13 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

17 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

17 மணி நேரங்கள் ago