அடிக்கடி சாம்பார் வைத்தாலும் பாலக் கீரை சேர்த்து இப்படி சாம்பார் செய்து பாருங்க சலிக்காம சாப்பிடுவாங்க!
அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது சாம்பார் தான். என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்
அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது சாம்பார் தான். என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் பதினைந்தே நிமிடங்களில் செய்யலாம்.
தமிழ்நாட்டில் பல வகையான சாம்பார் உண்டு. அதில் நாம் பாலக் கீரையை வைத்து சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம். பாலக் கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை. வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும். வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.
பாலக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும். இந்த கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.