வயிற்றுக்கு இதமாக ருசியான ஒமம் ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

விதவிதமான ரச வகைகளில் ஓமம் ரசம் ரொம்பவே ஆரோக்கியம் மிக்கதாக இருந்து வருகிறது. செரிமான பிரச்சனை, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு ஓமம் ரசத்திற்கு உண்டு. ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் ஓமம் அருமருந்து. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்

By ·

விதவிதமான ரச வகைகளில் ஓமம் ரசம் ரொம்பவே ஆரோக்கியம் மிக்கதாக இருந்து வருகிறது. செரிமான பிரச்சனை, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு ஓமம் ரசத்திற்கு உண்டு. ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் ஓமம் அருமருந்து. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது.

ஓமம் சேர்த்து இந்த அளவுகளில் நீங்கள் ஒரு முறை ரசம் வச்சு பாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது. சுவையான பாரம்பரிய ஓமம் ரசம் தெலுங்கு மாநிலங்களில் மிகவும் விரும்பி தயாரிக்கப்படுகிறது. ஓமம் ரசம் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதை நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதை சாதம், இட்லி இரண்டிலும் சாப்பிடலாம். அடுத்த வேளையில் ரசம் சாப்பிடுவது அஜீரணத்திற்கு உதவும்.

புதிதாக நொறுக்கப்பட்ட ஓமம் , மிளகு, சீரகம் மற்றும் பெருங்காயம்  சேர்த்து செய்யப்படும் இந்த ஓமம்  ரசம் நோய்வாய்ப்பட்ட நாட்களுக்கு அல்லது உங்களுக்கு சளி / தொண்டை புண் இருக்கும் போது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். மகப்பேற்றுக்கு பிறகான சமையல் / பத்திய சமையல்களில் ஓமம் ரசத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாகி அதனால் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும். இந்த காலத்தில் உணவு விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த சமையல் குறிப்பு பதிவில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு அருமையான ஓமம்  ரசம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த ரசம் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது. வாங்க இப்போ இந்த ஓமம் ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full