- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடுத்துவிட்டதா? அப்படியானால் சத்தான மிகவும் சுவையான மோர் தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள்.
வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது காலை உணவுக்கு ஏற்றது. காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான மோர் தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இந்த சுவையான மோர் தோசையை காரசாரமான தக்காளி சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினர் இனி தோசை மட்டும் போதும் என்பார்கள். இப்போது இந்த பதிவில் மோர் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மோர், வர மிளகாய், சீரகம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின் இதனை இட்லி மாவுடன் சேர்த்து அதனுடன் உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மோர் தோசை தயார்.






