Advertisement
சைவம்

மதுரை ஸ்பெஷல் ருசியான முள்முருங்கை வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

கிராமப்புறங்களில் கிடைக்கிற முள்முருங்கை அதாவது கல்யாண முருங்கை அப்படின்னு சொல்ற இலையை வச்சு ரொம்ப ருசியான ரொம்ப ஆரோக்கியமான வடை ஒன்னு செய்யப் போறோம். மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடை எப்படி செய்வது அப்படின்னு பார்க்க போறோம். குடும்பத்தில் யாராவது சளி பிரச்சனை இருந்தாலோ இருமல் தொல்லை இருந்தாலும் நாள்பட்ட சளி இருந்தாலும் இந்த முள் முருங்க இலையில் தேசை, அடை, வடை, பூரி போன்றவை செய்து கொடுத்து இந்த முள் முருங்கை இலை சளி பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். முள் முருங்கை இலையில் தோசை போன்றவை செய்வார்கள்.

நாம் இப்பொழுது  மதுரை ஸ்பெஷல் முழு முருங்கை வடை செய்ய உள்ளோம். இந்த முள் முருங்கை மரம் கிராமப்புறங்களில் வேலைகளில் போத்துக்களாக நடப்பட்டு வேலிக்காக வளர்க்கப்படும் வரும் மரம் ஆகும். இந்த மரம் முழுவதும் முட்களால் நிறைந்து இருப்பதால் இதற்கு முள் முருங்கை என்று பெயர் வந்தது. இதன் இலைகள் உணவில் சேர்த்துக் கொள்வதால் 40 வயதில் இடுப்பில் இருக்கும் சதை கூட கரைந்து போகும் அந்த அளவிற்கு நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கும்.

Advertisement

நாள்பட்ட சளி, நாள்பட்ட இருமல், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், ஆஸ்துமா போன்ற சளி பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த முள் முருங்கை இலையை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு நல்ல பலனை கொடுக்கிறது . இந்த முள் முருங்கை இலையில் தோசை, அடை, பொடி, பூரி போன்றவை செய்வார்கள். இப்பொழுது இந்த முள்முருங்கை இலையில் நாம் வடை செய்து உண்ணப் போகிறோம். இந்த வடைக்கு மேலே சிறிது பூச்சாக ஒரு பொடியும் செய்து சாப்பிட இருக்கிறோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த வடை மதுரை ஸ்பெஷல் முள் முருங்கை வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முள்முருங்கை வடை | Mulmurungai Vadai Recipe In Tamil

Print Recipe
கிராமப்புறங்களில் கிடைக்கிற முள்முருங்கை அதாவது கல்யாண முருங்கை அப்படின்னு சொல்ற இலையை வச்சு ரொம்பருசியான ரொம்ப ஆரோக்கியமான வடை ஒன்னு செய்யப் போறோம். மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடைஎப்படி செய்வது அப்படின்னு பார்க்க போறோம். குடும்பத்தில் யாராவது சளி பிரச்சனை இருந்தாலோஇருமல் தொல்லை இருந்தாலும் நாள்பட்ட சளி இருந்தாலும் இந்த முள் முருங்க இலையில் தேசை,அடை, வடை, பூரி போன்றவை செய்து கொடுத்து இந்த முள் முருங்கை இலை சளி பிரச்சனைகளை தீர்த்துவைக்கும். முள் முருங்கை இலையில் தோசை போன்றவை செய்வார்கள்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Mulmurungai vadai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 3
Calories 78

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

மாவு தயார் செய்ய

  • 2 கப் முள் முருங்கை இலை
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் பச்சரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு

பொடி தயார் செய்ய

  • 2 ஸ்பூன் உளுந்து
  • 2 காய்ந்தமிளகாய்
  • 4 ஸ்பூன் பொட்டுக்கடலை

 பொரிப்பதற்கு

  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி இட்லி அரிசியாகவோ அல்லது புழுங்கல் அரிசியாகவோ இருக்கலாம். பின்பு முள் முருங்கை
    Advertisement
    இலையை நரம்புகள் நீக்கி வெறும் இலையைமட்டும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இட்லி அரிசி ஊறுவதற்குள் நாம் முள் முருங்கை வடையின் மேல் துவங்கக்கூடிய பொடியை தயார் செய்து கொள்ளலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைக்கவேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து அதோடு வறுத்த உளுந்தும் காய்ந்த மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நாம் இந்த வடையில் காரம் எதுவும் சேர்க்கப் போவதில்லைஇந்த பொடி மட்டுமே காரமாகையால் காய்ந்த மிளகாய் உங்கள் விருப்பம் போல நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் பொட்டுக்கடலை அதிகமாக சேர்த்தாலும் சுவை அருமையாக இருக்கும்
  • அரிசி ஊறியபிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் அரிசியை கழுவி விட்டு நீரை முழுவதும் வடித்து விட்டுமிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.  அரிசி கொரகொரப்பாக அரைந்த பிறகு அதில் முள் முருங்கை இலை சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • நீர் அதிகமாக சேர்க்கக்கூடாது இந்த வடை மாவு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான்வடை தட்டி பொரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு பச்சரிசி மாவு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இந்த முள்முருங்கை மாவை சிறுசிறு உருண்டைகளாக கையில் எடுத்து நன்றாக வட்ட வடிவமாக தட்டி எண்ணெயில்போட்டு பொரிக்க வேண்டும்.
  • நன்றாக உப்பி வரும் வடைகளை திருப்பி போட்டுபொரித்து எடுக்கவும். இதே போல் எல்லா வடைகளையும் தட்டிபொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பொரித்த வடைகள் மேல் பொடித்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் உளுந்து பொட்டுக்கடலை பொடியை தூவி பரிமாறினால்சளிக்கு தீர்வு தரக்கூடிய ஆரோக்கியமான சுவையான முள் முருங்கை வடை தயார்.

Nutrition

Serving: 4no | Calories: 78kcal | Protein: 19g | Saturated Fat: 1.2g | Sodium: 34mg | Potassium: 278mg | Sugar: 3.6g | Iron: 46mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

2 நிமிடங்கள் ago

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

5 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

17 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

18 மணி நேரங்கள் ago