Advertisement
சட்னி

சுவையான முருங்கைகீரை சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று இந்த இருவகை சட்னிகளை மட்டும் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டால் உங்களுக்கே சலித்து போய் இருக்கும். நீங்கள் இப்பொழுது புதியதாக ஏதாவது ஒரு சட்னி செய்ய விருப்பபட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த முருங்கைக்கீரை சட்னியை செய்து பாருங்கள். முருங்கைக்கீரை பொரியல், அவியல் போன்ற உணவுகளை கூட வெறுத்து ஒதுக்குபவர்கள் இந்த முருங்கை கீரை சட்னியை சேர்த்து சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது பிடித்தமான சட்னியாக இது மாறி போகும் மேலும் முருங்கைக்கீரையில் பல சத்துக்கள் உள்ளதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும் அதனால் இன்று முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

முருங்கைகீரை சட்னி | Murungai Keerai Recipe in Tamil

Print Recipe
நீங்கள் இப்பொழுது புதியதாக ஏதாவது ஒரு சட்னி செய்ய விருப்பபட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த முருங்கைக்கீரை சட்னியை செய்து பாருங்கள். முருங்கைக்கீரை பொரியல், அவியல் போன்ற உணவுகளை கூட வெறுத்து ஒதுக்குபவர்கள் இந்த முருங்கை கீரை சட்னியை சேர்த்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது பிடித்தமான சட்னியாக இது மாறி போகும் மேலும் முருங்கைக்கீரையில் பல சத்துக்கள் உள்ளதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும்
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Murungaikeerai, முருங்கைகீரை
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 78

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கட்டு முருங்கைகீரை
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp உளுந்த பருப்பு
  • ¼ tbsp மிளகு
  • ¼ tbsp சீரகம்
  • 1  சின்ன துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 1  சின்ன துண்டு புளி
  • 4 tbsp தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் சிறிது

தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் ஒரு கட்டு முருங்கைக்கீரை இலையை தனியாக
    Advertisement
    எடுத்து நன்கு தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும், பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு கடலை பருப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • அதன் பின்பு இதனுடன் கால் டீஸ்பூன் மிளகு மற்றும் கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களும்
    Advertisement
    நன்றாக வறுத்தெடுத்த பின் இதனுடன் ஒரு சின்ன துண்டு இஞ்சி, 12 தோல் உரித்த வெங்காயம், 3 பச்சை மிளகாய் இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நாம் அலசி வைத்திருக்கும் முருங்கைக்கீரை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கீரை நன்றாக வதங்கி கருபஞ்சை நிறத்திற்கு வந்தவுடன் இதனுடன் நாம் வைத்திருக்கும் நான்கு டீஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின் கீரை நன்றாக வதக்கியதும் அடுப்பை அணைத்து குளிர வைத்து, பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய் கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதே கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்ந்து தாளித்து பின் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான முருங்கை கீரை சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 78kcal | Protein: 19g | Saturated Fat: 1.2g | Sodium: 34mg | Potassium: 278mg | Sugar: 3.6g | Iron: 46mg

English Overview: murungai keerai chutney is one of the most important dishes in india. murungai keerai chutney recipe or murungai keerai chutney seivathu eppadi or murungai keerai chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

16 நிமிடங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

13 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

15 மணி நேரங்கள் ago