சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி ?

- Advertisement -

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கொள்ளு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த கொள்ளு சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கொள்ளு சட்னி | Kollu Chutney Recipe in Tamil

உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக கொள்ளு இருக்கிறது. நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் இருந்து வருகிறது. நாம் ருசிக்காக பல உணவுகளை சாப்பிடும் பொழுது சிலசமயங்களில் ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை எல்லாம் ஏற்படும் இவைகள் அஜீரணத்தின் அறிகுறிகள். இதுபோன்ற சமயங்களில் இந்த கொள்ளு சட்னியை செய்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிக நன்றாக உதவும்.
Prep Time10 mins
Active Time10 mins
Total Time20 mins
Course: Breakfast, dinner
Cuisine: TAMIL
Keyword: chutney, சட்னி
Yield: 4

Equipment

 • 1 கடாய்
 • 1 மிக்ஸி
 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

 • ½ கப் கொள்ளு
 • கடலை எண்ணெய் தேவையான அளவு
 • கல் உப்பு தேவையான அளவு
 • கருவேப்பிலை            சிறிது
 • 1 tbsp கடுகு                            
 • 10 பல் பூண்டு                          
 • 4 சின்ன வெங்காயம்
 • ½ கப் தேங்காய் துருவியது

செய்முறை

 • முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பிறகு என்னை சூடேறும் வரை காத்திருக்கவும். பின் கொள்ளு சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • எண்ணெய் சூடேறியவுடன் கொள்ளு, வற்றல், வெங்காயம், பூண்டு இந்த நான்கையும் போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை அங்கு கிளறிவிட்டு வதக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், காடயை இறக்கி கொள்ளுங்கள்,பின்பு சூடு இறங்கியவுடன் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்காக நாம் வைத்துள்ள தேங்காய் மற்றும் கடாயில் வதக்கிய பொருள்களை ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • பின்பு அரைத்ததை தனியாக பவுளில் எடுத்துக் கொண்டு சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு சிறிதளவு கல் உப்பு போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
 • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியவுடன் கடுகை போட்டு கொள்ளவும், கடுகு பொரிந்த உடன் சிறிதளவு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
 • இந்த தாளிப்பை அப்படியே கொள்ளு சட்னியில் ஊற்றி கலக்கி கொள்ளுங்கள். இப்பொழுது சுவையான கொள்ளு சட்னி இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4g | Calcium: 287mg | Potassium: 311mg | Fat: 0.05g | Carbohydrates: 57.2g | Iron: 6.77mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here