நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கை மரமும் ஒன்று, ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு தரும். ஆகையால் இன்று நாம் இந்த முருங்கைக்கீரை சாம்பார் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சாம்பார் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி
இதையும் படியுங்கள் : மணமணக்கும் நாட்டுபுற கதம்ப சாம்பார் வைப்பது எப்படி ?
சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் வீடே மணமணக்கும். அடுத்த முறையும் இதே போல் சாம்பார் வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த மணமணக்கும் சுவையான முருங்கைக்கீரை சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். நீங்களும் இதை படித்து பார்த்து செய்து பாருங்கள்.
முருங்கைக் கீரை சாம்பார் | Murungai Keerai Sambar Recipe In Tamil
தேவையான பொருட்கள்
- 3 கையளவு முருங்கைக்கீரை
- 120 கிராம் சின்ன வெங்காயம்
- 9 பற்கள் பூண்டு
- 2 டீஸ்பூன் அரிசி
- 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
- கருவேப்பிலை ஒரு கொத்து
- ½ டீஸ்பூன் கடுகு
- 6 காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- 25 மில்லி எண்ணெய்
செய்முறை
- முதலில் கீரை இலைகளை ஆய்ந்து கொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்பை மொறமொறப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம், சேர்க்கவும். மற்றும் பூண்டை தட்டி போட்டு வதக்கவும்.
- தற்போது காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள பருப்பு, அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்து கலந்து கடாயில் ஊற்றவும்.
- பிறகு அதை நன்றாக கொதிக்கவிடவும். நன்கு கொதித்து பருப்பு மசியும் பதத்தில் கீரையை அலசி அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இந்து நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். தற்போது அதை கடையும் சட்டியில் கொட்டி நன்கு கடைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
- கொத்தி நிலையை அடையும்போது அடுப்பை அணைத்து இறக்கிவிடவும்.
- இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
Super