நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். சிக்கன் போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இந்ந சாம்பார். நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில்
இதையும் படியுங்கள் : அய்யர் வீட்டு சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?
வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது நாட்டுபுற ஸ்டைல் சாம்பார் ஆம், இன்று நாம் நாட்டுபுற கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த நாட்டுபுற கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த நாட்டுபுற கதம்ப சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நாட்டுபுற கதம்ப சாம்பார் | Nattupura Kathampa Sambar Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய், வாழைக்காய் கலந்து எடுத்து கொள்ளவும்
- 3 tbsp எண்ணெய்
- 2 தக்காளி நறுக்கியது
- ¼ கப் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு
- 100 கிராம் துவரம் பருப்பு வேக வைத்தது
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 3 tbsp சாம்பார் பொடி
- 100 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- கருவேப்பிலை சிறிது
- கொத்தமல்லி சிறிது
தாளிக்க
- 1 tbsp எண்ணெய்
- 1 tsp கடுகு உளுந்த பருப்பு
- ¼ tsp பெருங்காய தூள்
- வெந்தயம் சிறிது
- 2 வர மிளகாய்
செய்முறை
- முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கால் கப் அளவு தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் புளியை கரைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளுங்கள்
- பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிகரைசலை சேர்த்து அதனுன் மேலும் ஒரு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி. அதில் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேக வையுங்கள்
- பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்று, எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி வெந்து நன்கு மசிந்து வந்ததும். நாம் வேக வைத்த காய்கறியை தண்ணீருடன் சேர்க்கவும்.
- பின் இதனுடன் சாம்பார் பொடி மற்றும் வேக வைத்து மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் ஊற்று விளாவி இதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து.
- அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு சேர்த்து கடுகு பொரிந்தவுடன், கால் டீஸ்பூன் பெருங்காய தூள், சிறிது வெந்தயம், இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன் பின்பு தாளிப்பை கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு சாம்பார் நன்கு கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான நாட்டுபுற கதம்ப சாம்பார் தயார்.